ஒருபக்க அளவில் உரையாடல் எழுதுக.
சூழல் வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ்
மொழியைப் பேசமட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப்
பற்றி உரையாடுதல்.
வாவேற்பில் மொழிச்சிறப்பு
.pls solve
Answers
ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
Answer:
சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.
பங்குபெறுவோர் – தமிழன், உறவினர் மகள்
உறவினர் மகள் : வணக்கம் ஐயா.
தமிழன் : வணக்கம்
உறவினர் மகள் : உரையாடல், உரைநடை என்றால் என்ன?
தமிழன் : நீயும் நானும் பேசினால் உரையாடல். அதையே எழுதினால் உரைநடை.
உறவினர் மகள் : உரைநடை வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து யாது?
தமிழன் : உரைநடையில் எதுகை மோனை போன்ற அணிகளோ இல்லை. ஆனால்
அடுக்கு மொழிகள் உண்டு. கவிதையானது செயற்கைத் தன்மை கொண்டது.
உரைநடையோ இயல்பான ஒழுங்கில் அமையும்
உறவினர் மகள் : தமிழ் உரைநடையின் வேறு வகைகள் உண்டா ?
தமிழன் : உண்டு. பொதுவாக உரைநடையினை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கலாம். விளக்க உரைநடை, அளவை உரைநடை, எடுத்துரை உரைநடை, வருணனை உரைநடை, நாடக உரைநடை, சிந்தனை உரைநடை.
உறவினர் மகள் : எனக்கு வருணனை உரைநடையைப் பற்றி கூற முடியுமா?
தமிழன்
கூறுகிறேன். வருணனை உரைநடை என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பது. மக்கள், உயிரினங்கள், பொருள்கள் ஆகியவற்றை
வருணிப்பது.
உறவினர் மகள் : உரைநடையில் ஓசை இன்பம் ஏற்படுமா?
தமிழன் : எதுகை, மோனைச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி உரையாசிரியர்கள் பலர் உரையெழுதி உள்ளனர். எடுத்துக்காட்டாக இரா. பி. சேதுபிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலைக் கூறலாம்.
உறவினர் மகள் : உரைநடையில் இலக்கிய உத்திகள் உண்டா ?
தமிழன் : உண்டு. மு.வ. உரைநடையில் உவமை, எதுகை, மோனை சொல்லாட்சி போன்ற நான்கு உலக உத்திகளைக் கையாண்டுள்ளார்.
உறவினர் மகள் : உரைநடையில் மோனை நயம் உள்ளதா?
தமிழன் : உள்ளது. சான்றாக, இரா.பி. சேதுபிள்ளையின் ‘தமிழ் விருந்து’ என்னும் நூலில் ‘கலையும் கற்பனையும்’ என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில்,
‘மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது.
அருவியாய் விழுந்து ஆறாய் பாய்கிறது’ என்பதை அறிய முடிகிறது.
உறவினர் மகள் : மோனையும், இயைபும் வருவதுபோல் உரைநடை சொல்லுங்கள் ஐயா!
தமிழன் : சொல்கிறேன். இரா.பி.சேதுபிள்ளையின் ‘உமறுப்புலவர்’ எனும் கட்டுரையில், பாண்டிய நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது, பஞ்சம் வந்தது, பசி நோயும் மிகுந்தது.
உறவினர் மகள் : ஐயா கடைசியாக, முரண் நயம் பற்றி மட்டும் கூறுங்கள் ஐயா!
தமிழன் : முரண் என்பது முரண்பட்ட இரண்டுச் சொற்கள் அருகருகே அடுக்கி வருதல். இரா.பி.சேதுபிள்ளையின் ‘ஊரும் பேரும்’ என்னும் நூலில், வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களும் உண்டு. சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியங்கள் போல் பொலிவிழந்து உள்ளது.
உறவினர் மகள் : மிக்க நன்றி ஐயா. தங்களிடமிருந்து உரைநடையின் சிறப்பினை நன்கு அறிந்து கொண்டேன்.
தமிழன் : வணக்கம்!
ANSWER