India Languages, asked by shalushri46493, 9 months ago

கொடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு சிறுகதை எழுதுக-​

Attachments:

Answers

Answered by Anonymous
3

நூல்கள்:-

தமிழகத்தில் முன்பை விட தற்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக எழுத்தாளர்களும், பதிப்பகத்தார்களும் தெரிவித்துள்ளனர்.

நூல்கள் படிப்பதை புலனறி வழக்கம் என்பர். வாசிக்கும் பழக்கம் மனதை இலகுவாக்கும். வாழ்வை வளமாக்கும். இந்த கணினி யுகத்தில் இணையத்தில் உலவும் இளைய சமூகம் இழந்த சொர்க்கம், வாசிக்கும் பழக்கம். மேலை நாடுகளில் கூட புத்தகம் படிப்பது குறைந்து விட்டதாக தகவல்கள் வருகின்றன.

முன்பெல்லாம் கையில் புத்தகங்களுடன் செல்வதைப் பெருமையாக கருதுவார்கள். ஆனால் அந்த இடத்தை செல்போனும், லேப்டாப்பும் பறித்துக் கொண்டு விட்டன. விளைவு புத்தக வாசிப்பு என்பது கிட்டத்தட்ட இல்லாத ஒன்றாக மாறி வருகிறது.

ஒருவன் எவ்வளவு சிறந்தவன் என்பதை அவன் வாசிக்கும் புத்தகங்களை வைத்துச் சொல்லலாம் என்பார்கள். வீடு தோறும் சிறிய அளவிலான நூலகமாவது இருக்க வேண்டும் என்று அக்காலத்தில் வலியுறுத்தினார்கள், அதன்படியே இருந்துமு் வந்தார்கள். ஆனால் இன்று அதெல்லாம் இல்லாமல் போய் விட்டது.

65 சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்ற இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இதை நிலைதான் என்றாலும் தமிழகத்தில் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக எழுத்தாளர்களும், பதிப்பகத்தார்களும நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளி கல்வியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் 1979-81ல் ஆண்களில் 66 சதவீதம் பேரும், பெண்களில் 45.1 சதவீதம் பேரும் அதிகப்படியாக உயர்கல்வி பெற்றனர். 15 வயதுக்கு மேற்பட்டோரில் 42 சதவீதம் பேர் நாளிதழும், 6 சதவீதம் பேர் வார இதழும் படித்தனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறதாம். இதுகுறித்து எழுத்தாளர் வண்ணதாசன் கூறுகையில், கிராம நூலகத்திலு்ம் வாசகர்கள் நிறைய பேர் உள்ளனர். 2006-2008 எழுத்தாளர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் வசந்த காலம். அப்போது தரமான படைப்புகளும் நூலகத்துறைக்கு பெறப்பட்டன என்றார்.

Attachments:
Similar questions