நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக. அ) உடல்செல் நுண்தமனி மற்றும் பெளமானின் கிண்ணம் ஆ) சேகரிப்பு நாளம் மற்றும் சேய்மை சுருள் நுண் குழல் இ) கிளாமருலஸ் மற்றும் ஹென்லேயின் வளைவு ஈ) அண்மை சுருள் நுண்குழல் மற்றும் சிறுநீரக பெல்விஸ்
Answers
Answered by
0
Answer:
நீங்க தமிழா............
Answered by
0
நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகள்
- உடல்செல் நுண்தமனி
- பெளமானின் கிண்ணம்
- கிளாமருலஸ்
- அண்மை சுருள் நுண்குழல்
- ஹென்லேயின் வளைவு
- சேய்மை சுருள் நுண் குழல்
- சேகரிப்பு நாளம்
- சிறுநீரக பெல்விஸ்
நெஃப்ரான்கள்
- சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு நெஃப்ரான்கள் ஆகும்.
- நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் ஆனது முதலில் உடல்செல் நுண்தமனியை அடைகிறது.
- நெஃப்ரானின் சிறுநீரக நுண்குழல் ஆனது இரட்டை சுவருடைய பெளமானின் கிண்ணம் என்ற அமைப்பில் தொடங்குகிறது.
- பெளமானின் கிண்ணத்தினுள் கிளாமருலஸ் உள்ளது.
- சிறுநீரக நுண்குழல் பெளமானின் கிண்ணத்திற்குப் பிறகு அண்மை சுருள் நுண்குழலாகவும், பிறகு கொண்டை ஊசி வடிவம் உடைய ஹென்லேயின் வளைவாகவும் மாறுகிறது.
- ஹென்லேயின் வளைவு என்பது மெல்லிய கீழிறங்கு தூம்பையும், தடித்த மேலேறு தூம்பையும் உடையது ஆகும்.
- மேலேறு தூம்பு அதிக சுருளமைப்புடைய சேய்மை சுருள் நுண்குழலாக தொடர்கிறது.
- இறுதியில் இக்குழல் சேகரிப்பு நாளத்தில் முடிவடைகிறது.
- சேகரிப்பு நாளம் ஆனது மெடுல்லரி பிரமிடுகள் மற்றும் சிறுநீரக பெல்விஸ் வழியே சென்று பாப்பில்லரி நாளமாக மாறி, இறுதியில் காலிசெஸ் பகுதியில் சிறுநீரை விடுவிக்கிறது.
Attachments:
Similar questions
Science,
4 months ago
Math,
4 months ago
Psychology,
4 months ago
Physics,
9 months ago
English,
9 months ago