கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசைகள் யாவை? கிளாமருலார் வடிகட்டுதலுக்கான எதிர்விசைகள் யாவை? நிகர வடிகட்டுதல் அழுத்தம் என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
நீங்க தமிழா...........
Answered by
0
துரிதப்படுத்தும் விசைகள்
- கிளாமருலார் நீர்ம அழுத்தம் ஆனது கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசை ஆகும்.
- கிளாமருலஸில் வடிகட்டும் சவ்வின் வழியே நீரும், இரத்தத்தில் உள்ள பிற கரைபொருட்களும் வெளியேற, இரத்தத்தில் உள்ள கிளாமருலார் நீர்ம அழுத்தமே காரணம் ஆகும்.
எதிர்விசைகள்
- கிளாமருலார் வடிகட்டுதலுக்கான எதிர்விசைகள் கூழ்ம ஊடு கலப்பு அழுத்தம் மற்றும் கிளாமருலார் கிண்ணங்களில் நீர்ம அழுத்தம் ஆகும்.
- இந்த இரு அழுத்தங்களும் சேர்ந்து 45 mm Hg எதிர் அழுத்தத்தினை தருகிறது.
நிகர வடிகட்டுதல் அழுத்தம்
- நிகர வடிகட்டுதல் அழுத்தம் = கிளாமருலாரின் நீர்ம அழுத்தம் - (கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் + கிளாமருலார் கிண்ணத்தின் நீர்ம அழுத்தம்).
- நிகர வடிகட்டுதல் அழுத்தம் = 10 mm Hg.
Similar questions