சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியைச் சார்ந்துள்ளது? அ) பெளமானின் கிண்ணம் ஆ) ஹென்லே வளைவின் நீளம் இ) அண்மை சுருள் நுண்குழல் ஈ) கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு
Answers
Answered by
1
ஹென்லே வளைவின் நீளம்
நெஃப்ரான்கள்
- நெஃப்ரான்கள் என்பது சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
- நெஃப்ரானின் சிறுநீரக நுண்குழல் ஆனது இரட்டை சுவரினை உடைய பெளமானின் கிண்ணம் என்ற அமைப்பில் தொடங்குகிறது.
- பெளமானின் கிண்ணத்தினுள் கிளாமருலஸ் உள்ளது.
- சிறுநீரக நுண்குழல் பெளமானின் கிண்ணத்திற்குப் பிறகு அண்மை சுருள் நுண்குழலாகவும், பிறகு கொண்டை ஊசி வடிவம் உடைய ஹென்லேயின் வளைவாகவும் மாறுகிறது.
- ஹென்லேயின் வளைவு என்பது மெல்லிய கீழிறங்கு தூம்பையும், தடித்த மேலேறு தூம்பையும் உடையது ஆகும்.
- மேலேறு தூம்பு ஆனது அதிக சுருளமைப்புடைய சேய்மை சுருள் நுண்குழலாக தொடர்கிறது.
- சிறுநீர் அடர்வு ஆனது நெஃப்ரானின் ஹென்லே வளைவின் நீளத்தைச் சார்ந்து உள்ளது.
Similar questions
Social Sciences,
4 months ago
Science,
4 months ago
Math,
4 months ago
World Languages,
9 months ago
Math,
9 months ago
Math,
1 year ago
Psychology,
1 year ago