பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில், கீழ்க்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்? அ) சிறுநீர் உருவாக்கம் நடைபெறாது ஆ) உருவாக்கப்பட்ட சிறுநீரின் தரம் மற்றும் அளவில் எந்த மாற்றமும் இல்லை. இ) சிறுநீர் மிகுந்த அடரவுடையதாக இருக்கும் ஈ) சிறுநீர் நீர்த்துக் காணப்படும் .
Answers
Answered by
0
சிறுநீர் நீர்த்துக் காணப்படும்
ஹென்லே வளைவு
- இரட்டை சுவரினை உடைய பெளமானின் கிண்ணம் என்ற அமைப்பினுள் கிளாமருலஸ் உள்ளது.
- சிறுநீரக நுண்குழல் பெளமானின் கிண்ணத்திற்குப் பிறகு அண்மை சுருள் நுண்குழலாகவும், பிறகு கொண்டை ஊசி வடிவம் உடைய ஹென்லேயின் வளைவாகவும் மாறுகிறது.
- ஹென்லேயின் வளைவு என்பது மெல்லிய கீழிறங்கு தூம்பையும், தடித்த மேலேறு தூம்பையும் உடையது ஆகும்.
- ஹெலன்லே வளைவு ஆனது அடர்த்தி மிகுந்த சிறுநீரை உருவாக்குகிறது.
- மேலேறு தூம்பு ஆனது அதிக சுருளமைப்புடைய சேய்மை சுருள் நுண்குழலாக தொடர்கிறது.
- சிறுநீர் அடர்வு ஆனது நெஃப்ரானின் ஹென்லே வளைவின் நீளத்தைச் சார்ந்து உள்ளது.
- பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில் சிறுநீர் நீர்த்துக் காணப்படும்.
Similar questions
Science,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
Environmental Sciences,
9 months ago
Political Science,
1 year ago
Physics,
1 year ago