சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும் போது நிகழ்வதென்ன? அ) தொடர் சிறுநீர் வெளியேற்றம் ஆ) சிறுநீர் தொடர்ந்து இயல்பாக சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படும். இ) சிறுநீர் வெளியேற்றம் நடைபெறாது ஈ) சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரிக்கப்படுவதில்லை.
Answers
Answered by
0
சிறுநீர் வெளியேற்றம் நடைபெறாது
சிறுநீர் வெளியேற்றம்
- நெஃப்ரானில் உருவாகும் சிறுநீர் ஆனது சிறுநீரக நாளங்களின் வழியே சிறுநீர்ப்பையினை அடைந்து, அங்கேயே மைய நரம்பு மண்டலத்திலிருந்து சமிக்ஞை வரும்வரை தற்காலிகமாக சேமிக்கப்படுகிறது.
- சிறுநீர்ப்பை நிரம்பிய பிறகு நீட்சி உணர்விகள் தூண்டப்பட்டு சிறுநீர்ப்பை விரிவடைகிறது.
- இதனால் இணை பரிவு நரம்பு மண்டலத்தின் உணர்ச்சி நரம்புகள் வழியே மைய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, அதனால் சிறுநீர்ப்பை சுருங்கிறது.
- அதேசமயம், சிறுநீர்ப்பையின் சுருக்கத் தசைகள் புற உடலின் இயக்கு நரம்புகள் தூண்டப்படுவதால் மூடப்படுகின்றன.
- தூண்டுதல் மற்றும் தடைபடுத்தல் முதலியன உச்சநிலையினை கடக்கும் போது சுருக்குத் தசைகள் திறக்கப்பட்டு சிறுநீர் வெளியேறுகிறது.
- சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும் போது சிறுநீர் வெளியேற்றம் நடைபெறாது.
Similar questions