போடோசைட்டுகள் காணப்படுவது. அ) பெளமானின் கிண்ண வெளிச்சுவரில் ஆ) பெளமானின் கிண்ண உட்சுவரில் இ) நெஃப்ரானின் கழுத்துப் பகுதியில் ஈ) கிளாமருலார் இரத்த நுண்நாளங்களின் சுவரில்
Answers
Answered by
0
பெளமானின் கிண்ண உட்சுவரில்
நெஃப்ரான்கள்
- சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு நெஃப்ரான்கள் ஆகும்.
- நெஃப்ரானின் இரட்டை சுவருடைய பெளமானின் கிண்ணம் என்ற அமைப்பினுள் கிளாமருலஸ் உள்ளது.
- இது சிறுநீரக நுண்குழலுக்கு வடிதிரவத்தினை அனுப்புகிறது.
- ரீனல் கார்பசல் என்பது பெளமானின் கிண்ணம் மற்றும் கிளாமருலஸ் சேர்ந்த அமைப்பு ஆகும்.
- கிளாமருலஸின் புற அடுக்கு எளிமையான தட்டை செல்களால் ஆக்கப்பட்ட பெரைட்டல் அடுக்கு ஆகும்.
போடோசைட்டுகள்
- கிளாமருலஸின் உள் அடுக்கு ஆனது போடோசைட்டுகள் என்ற எபிதீலிய செல்களால் ஆனது ஆகும்.
- போடோசைட்டுகள் என்பது பெளமானின் கிண்ணச் உட்சவ்வில் உள்ள தட்டை எபிதீலிய செல்கள் ஆகும்.
- இதில் பல பாத நீட்சிகள் உள்ளன.
- கிளாமருலஸின் அடிப்படை சவ்வில் பாத நீட்சிகள் ஒட்டிக் கொண்டுள்ளன.
Similar questions