சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையுடைய உயிரிகள் அ) யூரியா நீக்கிகள் ஆ) அம்மோனியா நீக்கிகள் இ) யூரிக் அமில நீக்கிகள் ஈ) இரசாயன நீக்கிகள்.
Answers
Answered by
1
யூரிக் அமில நீக்கிகள்
- ஊர்வன, பறவைகள், நில வாழ் நத்தைகள் மற்றும் பூச்சிகள் முதலியன நைட்ரஜன் கழிவுகளை யூரிக் அமிலப் படிகங்களாக மிகக் குறைந்த நீர் இழப்புடன் வெளியேற்றுகின்றன.
- இதன் காரணமாக இந்த உயிரினங்கள் யூரிக் அமில நீக்கிகள் என அழைக்கப்படுகின்றன.
- நில வாழ் விலங்கினங்களில் நச்சுத் தன்மை குறைந்த யூரியா மற்றும் யூரிக் அமிலம் முதலியன உற்பத்தி செய்யப்படுவதால் நீர் சேமிக்கப்படுகிறது.
- குறைந்த நச்சத் தன்மையினை உடைய யூரிக் அமிலத்தினை வெளியேற்ற நீர் மிகக் குறைந்த அளவே போதுமானது ஆகும்.
- எனவே சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த் தேவை உடைய உயிரிகள் யூரிக் அமில நீக்கிகள் ஆகும்.
Similar questions