யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்குக் கழிவுகளின் நச்சுத்தன்மை மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது? இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது? மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.
Answers
Answered by
0
நைட்ரஜன் கழிவுப் பொருட்கள்
- யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்குக் கழிவுகளின் நச்சுத்தன்மை மற்றும் நீர்ப்புத் தேவையை நைட்ரஜன் கழிவுப் பொருட்கள் நிர்ணயிக்கிறது.
யூரிகோடெலிக் விலங்குகள் அல்லது யூரிக் அமில நீக்கிகள்
- ஊர்வன, பறவைகள், நில வாழ் நத்தைகள் மற்றும் பூச்சிகள் முதலியன நைட்ரஜன் கழிவுகளை யூரிக் அமிலப் படிகங்களாக மிகக் குறைந்த நீர் இழப்புடன் வெளியேற்றுகின்றன.
- இதன் காரணமாக இந்த உயிரினங்கள் யூரிக் அமில நீக்கிகள் என அழைக்கப்படுகின்றன.
- (எ.கா) புறா, பல்லி, கரப்பான் பூச்சி முதலியன ஆகும்.
யூரியோடெலிக் விலங்குகள் அல்லது யூரியா நீக்கிகள்
- பாலூட்டிகளும், நிலவாழ் இருவாழ்விகளும் யூரியாவினை நைட்ரஜன் கழிவாக வெளியேற்றுகின்றன.
- இதனால் இவை யூரியா நீக்கிகள் என அழைக்கப்படுகின்றன.
- (எ.கா) மனிதன், பசு முதலியன ஆகும்.
Similar questions