சிறுநீரகத்திலிருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் எது?
Answers
Answered by
0
சிறுநீரகத்திலிருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்
- கிளாமருலார் வடி கட்டும் வீதம் என்பது இரு சிறுநீரகங்களிலும் உள்ள மொத்த நெஃப்ரான்கள் ஒரு நிமிடத்தில் உருவாக்கும் வடி திரவத்தின் கொள்ளளவு என அழைக்கப்படுகிறது.
- முதிர்ந்த மனிதர்களில் கிளாமருலார் வடி கட்டும் வீதம் ஆனது ஒரு நிமிடத்தில் சுமார் 120 மி.லி முதல் 125 மி.லி வரை ஆகும்.
- கிளாமருலஸிலிருந்து பெளமனின் கிண்ணத்திற்கு நுழையும் வடிதிரவம் முதல் நிலை சிறுநீர் என அழைக்கப்படுகிறது.
- வெளிச்செல் தமனி வழியாக கிளாமருலஸிலிருந்து இரத்தம் வெளியேறுகிறது.
- இந்த நாளங்களில் உள்ள வரியற்ற தசைகளின் சுருக்கத்தால் இரத்தநாளம் சுருங்குகிறது.
- கார்ட்டிகல் நெஃப்ரான்களில் இரத்தம் வெளிச்செல் தமனியிலிருந்து புற நுண்குழல் நாளத்தொகுப்பிற்கு சென்று அங்கிருந்து சிரை மண்டலத்திற்கு செல்கிறது.
- சிறுநீரகத்திலிருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் சிறுநீரக சிரை ஆகும்.
Similar questions