குழல்களில் சுரத்தல் என்றால் என்ன? சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.
Answers
Answered by
0
Explanation:
which handwriting is this .. please write in hindi or english
Answered by
1
குழல்களில் சுரத்தல்
- புற நுண்குழல்களைச் சுற்றியுள்ள இரத்த நுண் நாளத்தொகுப்பிலிருந்து குழலில் உள்ள வடிதிரவத்தினுள் ஹைட்ரஜன், பொட்டாசியம், அம்மோனியா, கிரியாட்டினின் மற்றும் கரிம அமிலங்கள் முதலியன செல்கின்றன.
- சோடியம் அயனிகளும், நீரும் ஹென்லே வளைவில் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
- அதிக அளவில் நீர் அண்மை சுருண்ட நுண்குழலில் உறிஞ்சப்படுகிறது.
- பிறகு சேய்மை சுருள் நுண்குழலை அடையும் தாழ்உப்படர்வு கொண்ட திரவத்துடன் யூரியா மற்றும் உப்புகளும் சேர்கின்றன.
- தற்போது வடிதிரவமும், சுரக்கப்பட்ட பொருட்களும் சிறுநீரில் காணப்படும்.
- சேகரிப்பு நாளத்தினுள் சிறுநீர் நுழையும்போது நீர் உறிஞ்சப்படுவதால், அடர்த்தி அதிகமான உயர்உப்படர்வு தன்மை உடைய சிறுநீர் உருவாகிறது.
- குழலில் உள்ள வடிதிரவத்தில் வெளிவிடப்படுகிற ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ஒரு சோடியம் அயனி, குழல் செல்களினால் உறிஞ்சப்படுகிறது.
- இவ்வாறு சுரக்கப்பட்ட ஹைட்ரஜன் ஆனது பைகார்பனேட்கள், பைபாஸ்பேட்டுகள் மற்றும் அம்மோனியா ஆகியவற்றுடன் சேர்ந்து கார்பானிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலமாக மாறுகிறது.
- திரவத்திலுள்ள ஹைட்ரஜன் அயனியானது நிலைபடுத்தப்பட்டதால், அவை மீள உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது.
சுரக்கப்படும் பொருட்கள்
- ஹைட்ரஜன்
- பொட்டாசியம்
- அம்மோனியா
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
Science,
1 year ago