சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?
Answers
Answered by
0
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள்
- ஆன்டிடையூரிடிக் ஹார்மோன்
- ரெனின் ஆஞ்சியோடென்சின்
- ஆல்டோஸ்டீரோன்
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்துதல்
- உடலிலிருந்து அதிக அளவில் நீர் இழப்பு ஏற்படுதல் அல்லது இரத்த அழுத்தம் அதிகரிப்பு ஆகியவைகளினால் ஹைப்போ தலாமஸின் ஊடுகலப்பு உணர்விகள் உடனடியாக தூண்டப்படுகின்றன.
- இதனால் நியுரோ ஹைபோபைசிஸ் தூண்டப்பட்டு ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் என்ற வாயோபிரஸ்ஸின் அல்லது சிறுநீர்ப் பெருக்கெதிர் ஹார்மோன் வெளியிடப்படுகிறது.
- இதனால் சேகரிப்பு நாளம் மற்றும் சேய்மை சுருள் நுண் குழல்களின் செல்பரப்புகளில், அக்குவாபோரின்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
- இதனால் நீர் மீள உறிஞ்சுதல் நடைபெறுகிறது.
- அக்குவாபோரின்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் குழலின் உட்பகுதியில் இருந்து இடையீட்டு திரவத்திற்கு நீரானது செல்கின்றன.
- இதனால் சிறுநீர்ப் பெருக்கின் காரணமாக உருவாகும் அதிக நீரிழப்பு தடுக்கப்படுகிறது.
Similar questions