சிறுநீரகத்தின் அமைப்பினை பற்றி விளக்குக.
Answers
Answered by
0
விடை:-
* உட்புறத்தில், சிறுநீரகத்திற்கு மூன்று பகுதிகள் உள்ளன: வெளிப்புற புறணி, நடுவில் ஒரு மெடுல்லா, மற்றும் சிறுநீரகத்தின் இடுப்பு சிறுநீரகத்தின் ஹிலம் என அழைக்கப்படுகிறது. ஹிலம் என்பது பீன் வடிவத்தின் குழிவான பகுதியாகும், அங்கு இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சிறுநீரகத்திற்குள் நுழைந்து வெளியேறும்; இது சிறுநீர்க்குழாய்களுக்கான வெளியேறும் இடமாகும்.
PLS MARK ME AS BRANLIEST
Answered by
0
சிறுநீரகத்தின் அமைப்பு
- ஒவ்வொரு சிறுநீரகமும் 120-170 கிராம் எடை உடையது உள்ளது.
- ரீனல் ஃபேசியா, பெரிரீனல் கொழுப்பு உறை மற்றும் நார் உறை ஆகிய ஆதரவுத் திசுக்கள் சிறுநீரகத்தின் மேல் மூன்று அடுக்குகளாக உள்ளன.
- சிறுநீரக நீள்வெட்டுத் தோற்றத்தில் வெளிப்புற கார்டெக்ஸ், உட்புற மெடுல்லா மற்றும் பெல்விஸ் பகுதிகள் உள்ளன.
- சில கூம்பு வடிவ திசுத் தொகுப்புகளினால் மெடுல்லா பகுதி பிரிக்கப்பட்டு உள்ளது.
- இந்த திசுத்தொகுப்பிற்கு மெடுல்லரி பிரமிடுகள் அல்லது சிறுநீரக பிரமிடுகள் என்று பெயர்.
- பெர்டினியின் சிறுநீரகத் தூண்கள் என மெடுல்லரி பிரமிடுகளுக்கு இடையே நீட்சி அடைந்துள்ள கார்டெக்ஸின் பகுதிகள் அழைக்கப்படுகின்றன.
- சிறுநீரக ஹைலம் என்பது சிறுநீரகத்தின் குழிந்த பரப்பின் உட்பகுதியில் உள்ள மேடு ஆகும்.
- இதன் வழியே சிறுநீரகத்தினுள் சிறுநீரக நாளம், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் செல்கின்றன.
- சிறுநீரக ஹைலத்தின் உட்புறத்தில் உள்ள அகன்ற புனல் வடிவ இடைவெளி சிறுநீரக பெல்விஸ் எனவும், அதன் நீட்சிகள் காலிசெஸ் எனவும் அழைக்கப்படுகின்றன.
- சிறுநீரக நாளம் ஆனது சிறுநீரக பெல்விஸின் தொடர்ச்சியாக உள்ளது.
- ஒழுங்கமைவாக இயங்கும் வரியற்ற தசைகள் காலிசெஸ், பெல்விஸ் மற்றும் சிறுநீரக நாளங்களின் சுவர்களில் உள்ளது.
- சிறுநீரினை காலிசெஸ் சேகரித்து சிறுநீர்நாளம் வழியே அனுப்புகிறது.
- சிறுநீர் தற்காலிகமாக சிறுநீர்ப்பையில் சேமிக்கப்படுகிறது.
- சிறுநீர் வெளிவிடு நாளத்தில் சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.
Attachments:
Similar questions