சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிரைட்டின் நோயை பற்றி கூறுக.
Answers
Answered by
0
Answer:
sorry I don't understand the language
Answered by
0
சிறுநீரக செயலிழப்பு
- நைட்ரஜன் கழிவுப் பொருளை வெளியேற்ற சிறுநீரகங்கள் தவறுவதன் விளைவாக யூரியா முதலியன உடலில் தேங்கி சிறுநீர் வெளியேற்றம் அதிக அளவில் குறைகிறது.
- உடனடி செயலிழப்பு மற்றும் நாள் பட்ட செயலிழப்பு என சிறுநீரக செயலிழப்பு இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- உடனடி செயலிழப்பில் சிறுநீரகங்கள் திடீரென செயலிழந்தாலும், அவை மீண்டும் மீள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
- நாள்பட்ட செயலிழப்பில் நெஃப்ரான்கள் படிப்படியாக செயலிழப்பதினால் சிறுநீரகப் பணிகளும் படிப்படியாகக் குறைகின்றன.
கிளாமருலோ நெஃப்ரைடிஸ் அல்லது பிரைட்டின் நோய்
- ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தாக்கத்தின் பின் விளைவாக குழந்தைகளில் இரு சிறுநீரகங்களிலும் கிளாமருலஸ் வீங்குதலே கிளாமருலோ நெஃப்ரைடிஸ் நோயின் பண்பாகும்.
- இந்நோயின் அறிகுறிகள் சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீரில் புரதம் வெளியேறுதல், உப்பு மற்றும் நீர் உடலில் தேங்குதல், ஒலிகோயுரியா மிகை அழுத்தம் மற்றும் நுரையீரல் வீக்கம் முதலியன ஆகும்.
Similar questions