சார்கோமியரிலுள்ள தசையிழைகளின் பெயர்களைக் கூறுக.
Answers
Answered by
1
சார்கோமியரிலுள்ள தசையிழைகளின் பெயர்கள்
சார்கோமியர்
- சார்கோமியர் என்பது எலும்புத் தசைகள் அல்லது தசை நார்களின் செயல் அலகு ஆகும்.
- ஒரு சார்கோமியர் என்பது தசை நுண்ணிழையின் அடுத்தடுத்த இரண்டு Z கோடுகளுக்கு இடையே உள்ள பகுதி ஆகும்.
- ஒரு சார்கோமியரின் நடுவில் A என்ற பட்டையும், அதன் இரண்டு புறங்களிலும் பாதி I என்ற பட்டைகளும் உள்ளன.
இழைகள்
- ஒவ்வொரு சார்கோமியரிலும் தடித்த இழைகள் மற்றும் மெல்லிய இழைகள் என இரு வகை இழைகள் காணப்படுகின்றன.
- தடித்த இழைகள் ஆனது A என்ற பட்டை முழுவதும் நீண்டு காணப்படுகிறது.
- மெல்லிய இழைகள் ஆனது I என்ற பட்டையின் முழு நீளப்பகுதி மட்டுமின்றி, A என்ற பட்டையிலும் ஒரு பகுதிவரை நீண்டு உள்ளது.
Similar questions