அச்சு சட்டகத்தில் அடங்கியுள்ள மூன்று முக்கியப் பகுதிகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answers
Answered by
0
அச்சு சட்டகத்தில் அடங்கியுள்ள முக்கியப் பகுதிகளின் பெயர்கள்
- அச்சுச் சட்டகத்தில் உள்ள எலும்புகள் மண்டையோடு, நாவடி எலும்பு, முதுகெலும்புத் தொடர் மற்றும் மார்புக் கூடு ஆகும்.
மண்டையோடு
- மண்டை ஓட்டில் உள்ள எலும்புகள் கபால எலும்புகள் மற்றும் முகத்து எலும்புகள் என இரு தொகுப்புகளாக அமைந்து உள்ளன.
- மண்டை ஓட்டில் மொத்தமாக உள்ள 22 எலும்புகளில் 14 முகத்தெலும்புகளும், 8 கபால எலும்புகளும் அடங்கும்.
நாவடி எலும்பு
- தொண்டைக் குழியின் அடிப்பகுதியில் U வடிவ ஒற்றை நாவடி எலும்பு காணப்படுகிறது.
- மனித உடலில் இணைக்கப்படாத எலும்பு நாவடி எலும்பு ஆகும்.
முதுகெலும்புத் தொடர்
- முதுகெலும்புத் தொடரிலுள்ள எலும்புகள் கழுத்து முள்ளெலும்புகள் (7), மார்பு முள்ளெலும்புகள் (12), இடுப்பு முள்ளெலும்புகள் (5) திருவெலும்புப் பகுதி முள்ளெலும்புகள் (5) மற்றும் வால் எலும்பு (1) என 5 பிரிவுகளாக உள்ளன.
மார்புக் கூடு
- வயிற்றுப்புறத்தில் மார்புக்கூட்டின் மையத்தில் தட்டையான மார்பெலும்பு உள்ளது.
- இது விலா எலும்புகள் மற்றும் வயிற்றுப்புறத் தசைகள் இணைவதற்கு இடமளிக்கின்றன.
Answered by
1
Answer:
can you please ask the question in English
Explanation:
please mark the answer as brainliest
Similar questions