இடுப்பு வளையத்திலுள்ள எலும்புகள் யாவை?
Answers
Answer:
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம்.[1] மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.)
மனித எலும்புக்கூடு
மண்டையறை எலும்புகள்(8):
1 நுதலெலும்பு (frontal bone)
2 சுவரெலும்பு (parietal bone) (2)
3 கடைநுதலெலும்பு (temporal bone) (2)
4 பிடர் எலும்பு (occipital bone)
ஆப்புரு எலும்பு (sphenoid bone)
நெய்யரியெலும்பு (ethmoid bone)
முக எலும்புகள்(14):
7 கீழ்த்தாடை எலும்பு (mandible)
6 மேல்தாடை எலும்பு (maxilla) (2)
அண்ணவெலும்பு (palatine bone) (2)
5 கன்ன எலும்பு (zygomatic bone) (2)
மூக்கெலும்பு (nasal bone) (2)
கண்ணீர்க் குழாய் எலும்பு (lacrimal bone) (2)
மூக்குச்சுவர் எலும்பு (vomer)
கீழ்மூக்கு சங்கெலும்பு (inferior nasal conchae) (2)
Explanation:
please mark as brainliest.
இடுப்பு வளையம்
- இடுப்பு வளையம் என்பது அதிக எடையினைத் தாங்கக்கூடிய உறுதியான சிறப்பு வாய்ந்த அமைப்பு ஆகும்.
- இடுப்பு வளையம் ஆனது காக்ஸல் எலும்பு என்ற இரு இடுப்பு எலும்புகளால் உருவானது.
- காக்ஸல் எலும்புகள் கால்களை அச்சுச் சட்டகத்துடன் இணைத்து பாதுகாக்கிறது.
- இது இடுப்பு வளையத்திற்கு திருவெலும்பு மற்றும் வாலெலும்புடன் சேர்ந்து கோப்பை வடிவ அமைப்பினை தருகிறது.
- ஒவ்வொரு காக்ஸல் எலும்பும் இலியம், இஸ்கியம் மற்றும் பூப்பெலும்பு ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- மேலே கூறப்பட்டு உள்ள மூன்று எலும்புகளும் இணையும் இடத்தில் அசிட்டாபுலம் என்ற ஆழ்ந்த அரைக்கோளக் குழி இடுப்பின் பக்க வாட்டில் உள்ளது.
- அசிட்டாபுலத்தில் தொடை எலும்பின் தலைப்பகுதி பொருந்தி இருப்பதால், தொடை எலும்பு நன்கு அசைகிறது.
- வயிற்றுப்பகுதியில் இடுப்பு வளையத்தின் இரு பகுதிகளும் இணைந்து, நாரிழைக் குருத்தெலும்பைக் கொண்ட பூப்பெலும்பு இணையை உருவாக்குகிறது.