தசை மண்டலத்தின் கோளாறுகளைப் பட்டியலிடுக.
Answers
Answered by
0
Explanation:
தசை மண்டலம் (Muscular system) என்பது எலும்பு, வாியற்ற தசை மற்றும் இதய தசை ஆகிய உறுப்புகள் சேர்ந்ததாகும். தசைமண்டலமானது, உடல் இயக்கத்திற்கும், உடல் அமைப்பிற்கும் மற்றும் இரத்த ஓட்டமானது உடல் முழுவதும் பாய்வதற்கும் பயன்படுகிறது. முதுகெலும்புடைய உயிாினங்களின் தசை மண்டலமானது நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது; இருந்த போதிலும் சில தசைகள் தன்னிச்சையாக இயங்கக்கூடியதாக உள்ளது. எலும்பு மற்றும் தசை மண்டலம் இரண்டும் சேர்ந்து தசை-எலும்பு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இது மனித உடலின் இயக்கத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
Answered by
0
தசை மண்டலத்தின் கோளாறுகள்
தசைகள்
- கரு வளர்ச்சியின் போது நடுப்படை செல்களில் இருந்து உருவாகும் சிறப்புத் திசு ஆனது தசைகள் என அழைக்கப்படுகிறது.
- மையோசைட்டுகள் என்ற செல்களினால் தசைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
- பெரியவர்களின் உடல் எடையில் 40 முதல் 50 சதவீதம் என்ற அளவிற்கு தசைகள் காணப்படுகின்றன.
- தசைச் செல்கள் அல்லது மையோசைட்டுகள் இணைப்புத் திசுவினால் இணைக்கப்பட்டு, பின்னர் அவை தசைத் திசுவாக மாறுகின்றன.
- கைகள், கால்கள், நாக்கு, தாடைகள் முதலிய உறுப்புகளில் சுருங்கி விரியும் தசைகளால் தசை இயக்கம் நடைபெறுகிறது.
தசை மண்டலத்தின் கோளாறுகள்
- மையாஸ்தீனியா கிரேவிஸ்
- டெட்டனி
- தசைச் சோர்வு
- தசைச் செயலிழப்பு
- தசைப் பிடிப்பு
- தசைச் சிதைவு நோய்
Similar questions