கீழ்க்கண்ட நரம்புத்தூண்டல் தொடர்பான கூற்றுகளில் தவறானது எது? அ) ஓய்வு நிலை நியூரானில் ஆக்ஸான் படலம் K+ அயனிகளை அதிகம் ஊடுருவ விடுகின்றது. Na+ அயனிகளை ஊடுருவ விடுவதில்லை. ஆ) ஓய்வு நிலை நியூரானில் உள்ள ஆக்ஸானின் வெளிப்புறத்தில் Na+ அயனிகளின் செறிவு அதிகமாகவும் K+ அயனிகளின்செறிவு குறைவாகவும் உள்ளது. இ) ஓய்வு நிலையிலுள்ள ஆக்ஸான் படலங்களுக்கிடையே Na+ மற்றும் K+ உந்தம் மூலம் அயனிகளின் வேறுபாடு பராமரிக்கப்படுகிறது. இது வெளியேறும் 3Na+ அயனிகளுக்கு பதிலாக 2K+ அயனிகளை செல்லுக்குள் அனுமதிக்கிறது ஈ) ஆக்ஸான் படலத்தில் வெளிப்பரப்பு எதிர்மின் தன்மையுடனும் உட்பரப்பு நேர்மின் தன்மையுடனும் இருக்கும் போது மட்டுமே ஒரு நியூரான் மின் முனைப்பியக்கத்தைப் பெறும்.
Answers
Answered by
0
ஆக்ஸான் படலத்தில் வெளிப்பரப்பு எதிர்மின் தன்மையுடனும் உட்பரப்பு நேர்மின் தன்மையுடனும் இருக்கும் போது மட்டுமே ஒரு நியூரான் மின் முனைப்பியக்கத்தைப் பெறும்
ஒய்வு நிலை சவ்வு மின் அழுத்தம்.
- ஓய்வு நிலை நியூரானில் ஆக்ஸான் படலம் K+ அயனிகளை அதிகம் ஊடுருவ விடுகின்றது.
- Na+ அயனிகள் குறைவாகவே ஊடுருவுகின்றன.
- அதே சமயம் எதிர்மறை மின்னூட்டம் உடைய புரதங்கள் ஊடுருவ விடுவதில்லை.
- ஆக்ஸோபிளாசத்தில் எதிர்மறை மின்னூட்டப் புரதங்கள் மற்றும் பொட்டாசியம் அயனிகளின் அடர்த்தி அதிகமாகவும், சோடியம் அயனிகளின் அடர்த்தி குறைவாகவும் உள்ளது.
- ஓய்வு நிலை நியூரானில் உள்ள ஆக்ஸானின் வெளிப்புறத்தில் Na+ அயனிகளின் செறிவு அதிகமாகவும் K+ அயனிகளின் செறிவு குறைவாகவும் உள்ளது.
- ஓய்வு நிலையிலுள்ள ஆக்ஸான் படலங்களுக்கிடையே Na+ மற்றும் K+ உந்தம் மூலம் அயனிகளின் வேறுபாடு பராமரிக்கப்படுகிறது.
- இது வெளியேறும் 3Na+ அயனிகளுக்கு பதிலாக 2K+ அயனிகளை செல்லுக்குள் அனுமதிக்கிறது.
Similar questions
Computer Science,
3 months ago
English,
7 months ago
Sociology,
7 months ago
Science,
11 months ago
Math,
11 months ago