"கீழ்கண்டவற்றில் ஒன்றைத் தவிர மீதி மயலின் உறையுடன் தொடர்புடையது. அந்தஒன்று எது? அ) நரம்புத் தூண்டல் விரைவாகக் கடத்தப்படும் ஆ) ரான்வியர் கணு ஆக்ஸான்களில் ஆங்காங்கே இடைவெளிகளை ஏற்படுத்துகின்றன. இ) நரம்புத் தூண்டல் கடத்தலுக்காக ஆற்றல் வெளிப்பாடு அதிகரித்தல் ஈ) செயல் மின்னழுத்தம் தாவுதல் வழி கடத்தப்படுகிறது. "
Answers
Answered by
0
தயவுசெய்து கேழ்வியை சரியாக கேட்கவும். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
Answered by
0
நரம்புத் தூண்டல் கடத்தலுக்காக ஆற்றல் வெளிப்பாடு அதிகரித்தல்
மயலின் உறை
- புற நரம்பு மண்டலத்தில் காணப்படும் ஆக்ஸான்களின் மேல் புறத்தினை கிளியால் செல்களின் ஒரு வகையான ஷிவான் செல்கள் சூழ்ந்து காணப்படுகின்றன.
- இந்த ஷிவான் செல்கள் மயலின் உறையினை உருவாக்குகின்றன.
- மயலின் உறை ஆனது ஆக்ஸான்களில் மட்டுமே காணப்படுகிறது.
- ஆக்ஸானில் உள்ள மயலின் உறை ஆனது தொடர்ச்சியாக காணப்படுவது கிடையாது.
- அடுத்த அடுத்த ஷிவான் செல்களுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி காணப்படுகின்றது.
- இந்த இடைவெளிக்கு ரான்வியர் கணு என்று பெயர்.
- மயலின் உறைகளை உடைய நீண்ட நரம்பிழைகள் மிக வேகமாகத் தூண்டல்களைக் கடத்துகின்றன.
- செயல் மின்னழுத்தம் தாவுதல் வழி கடத்தப்படுகிறது.
Similar questions