முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை பெறுகிறது. ஏன்?
Answers
Answered by
0
Explanation:
The nerve sheath at the end of the mesothelioma receives the peak motility. Why?
Answered by
0
முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை பெறுவதற்கான காரணம்
மின்முனைப்பியக்க மீட்சி
- கூர்முனை மின்னழுத்த அளவினை அடைந்த பிறகு ஆக்ஸோலெம்மாவில் காணப்படும் சோடியம் மின்னூட்டக் கால்வாய் மூடப்பட்டு, பொட்டாசியம் மின்னூட்டக் கால்வாய் திறக்கிறது.
- இதனால் சோடியம் அயனிகளின் உள்ளேற்றம் தடுக்கப்பட்டுப் பொட்டாசியம் அயனிகளின் வெளியேற்றம் தொடங்குகிறது.
- இதனால் செல்லினுள் நேர்மறை மின்னூட்ட அயனிகளின் அளவு குறைந்து, மின்னழுத்த அளவு மீண்டும் ஓய்வு நிலை மின்னழுத்த அளவினை நோக்கி செல்கிறது.
- எனவே பொட்டாசியம் அயனிகள் ஆக்ஸோலெம்மாவை விட்டு வெளியேறுவதால் ஆக்ஸோலெம்மாவின் உட்புறம் மீண்டும் எதிர்மறை மின்தன்மையினை பெறுகிறது.
- இதுவே மின்முனைப்பியக்க மீட்சி ஆகும்.
உச்ச மின்முனைப்பியக்கம்
- இயல்பான அளவான -70mV என்ற அளவினை கடந்து -90mV என்ற அளவிற்கு மின்னழுத்தம் செல்லும் போது அதிக எதிர்மறைத் தன்மையுடையதாக மாறுகிறது.
- இதற்கு உச்ச மின்முனைப்பியக்கம் என்று பெயர்.
- எனவே நரம்பு உறையானது மின்முனைப்பியக்க மீட்சியின் முடிவில் உச்ச முனைப்பியக்கத்தை பெறுகிறது.
Similar questions
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
Science,
4 months ago
English,
1 year ago
Geography,
1 year ago
Accountancy,
1 year ago