தூண்டுதல் அடிப்படையில் உணர்வுறுப்புகளை வகைப்படுத்து.
Answers
Answered by
0
please translate it in english i cannot understant
Answered by
0
தூண்டுதல் அடிப்படையில் உணர்வுறுப்புகளை வகைகள்
இயக்க உணர்வேற்பிகள்
- அழுத்தம் மற்றும் அதிர்வுகள் போன்ற தூண்டலை உணரும் உணர்வேற்பிகள் இயக்க உணர்வேற்பிகள் ஆகும்.
- அகச் செவியின் காக்ளியா அரை வட்டக் கால்வாய் மற்றும் யூட்ரிகுலஸ் பகுதி ஆகிய இடங்களில் இயக்க உணர்வேற்பிகள் உள்ளன.
வேதி உணர்வேற்பிகள்
- வேதிப் பொருட்களின் தூண்டலை உணரும் உணர்வேற்பிகள் வேதி உணர்வேற்பிகள் ஆகும்.
- நாக்கில் உள்ள சுவை அரும்புகள் மற்றும் நாசி எபிதீலியம் ஆகிய இடங்களில் வேதி உணர்வேற்பிகள் உள்ளன.
வெப்ப உணர்வேற்பிகள்
- வெப்பத் தூண்டலை உணரும் உணர்வேற்பிகள் வெப்ப உணர்வேற்பிகள் ஆகும்.
- தோல் போன்ற இடங்களில் வெப்ப உணர்வேற்பிகள் உள்ளன.
ஒளி உணர்வேற்பிகள்
- ஒளியினை உணரும் உணர்வேற்பிகள் ஒளி உணர்வேற்பிகள் ஆகும்.
- கண்களில் உள்ள குச்சி மற்றும் கூம்பு செல்களில் ஒளி உணர்வேற்பிகள் உள்ளன.
Similar questions