மனித விந்தகத்தில் விந்தணுவாக்கம் எதனால் கட்டுப்படுத்தப்படுகின்றது? அ) லூட்டினைசிங் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன் இ) ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன் மற்றும் புரோலாக்டின் ஈ) வளர்ச்சி ஹார்மோன்மற்றும் புரோலாக்டின்
Answers
Answered by
0
Answer:
please translate it in English i cannot understant it
...
Answered by
0
ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன்
- மனித விந்தகத்தில் விந்தணுவாக்கம் ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் (Follicle Stimulating Hormone - FSH)
- கிளைக்கோ புரத ஹார்மோனான ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH) அண்டகம் மற்றும் விந்தகம் ஆகிய இன உறுப்புக்களின் பணிகளை நெறிப்படுத்துகின்றன.
- ஆண்களில் ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH) ஆனது ஆண்ட்ரோஜனுடன் சேர்ந்து விந்தணுவாக்கத்தின் போது விந்து நுண் குழலில் உள்ள வளர்ச்சி எபிதீலியத்தின் மீது செயல்பட்டு விந்தணு உற்பத்தி மற்றும் வெளியேற்றத்தினைத் தூண்டுகிறது.
- பெண்களில் ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH) ஆனது அண்டகத்தின் மீது செயல்பட்டு கிராஃபியன் ஃபாலிக்கிளை வளர்ப்பதுடன் முதிர்ச்சி அடையவும் தூண்டுகிறது.
Similar questions