ஒரு கருவுற்ற பெண் குழந்தையை பெற்றுள்ளார். அக்குழந்தை குட்டையான வளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைபாடு, குறைந்த அறிவாற்றல் திறன், இயல்புக்கு மாறான தோல் ஆகிய அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம். அ) குறைந்த அளவு வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு ஆ) தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் இ) பார்ஸ் டிஸ்டாலிஸ் மிகை சுரப்பு ஈ) உணவில் அயோடின் பற்றாக்குறை
Answers
Answered by
0
Answer:
Which language is this......
Answered by
2
உணவில் அயோடின் பற்றாக்குறை
கிரிடினிசம்
- உணவில் அயோடின் பற்றாக்குறையின் காரணமாக தைராய்டு சுரப்பியில் குறைபாடு ஏற்படுகிறது.
- குழந்தைகளில் குறை தைராய்டு சுரப்பின் காரணமாக கிரிடினிசம் என்ற குறைபாடு உருவாகிறது.
- கிரிடினிசத்தினால் குறைவான எலும்பு வளர்ச்சி, பால் பண்பில் முதிர்ச்சியின்மை, மன வளர்ச்சி குறைதல், தடித்த சுருங்கிய தோல், தடித்த துருத்திய நாக்கு, உப்பிய முகம், குட்டையான தடித்த கை மற்றும் கால்கள் முதலியன ஏற்படுகிறது.
- மேலும் கிரிடினிசத்தின் சில அறிகுறிகள் குறைந்த அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம், குறைந்த நாடித் துடிப்பு, குறைந்த உடல் வெப்பநிலை மற்றும் இரத்தக் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தல் முதலியன ஆகும்.
- எனவே வினாவில் உள்ள கருவுற்ற பெண் பெற்றெடுக்கும் குழந்தையில் உள்ள குறைபாடுகளுக்கு காரணம் உணவில் அயோடின் பற்றாக்குறையினால் ஏற்படும் கிரிடினிசம் ஆகும்.
Attachments:
Similar questions