கீழ்வருவனவற்றுள் சரியான கூற்று எது? அ) கால்சிடோனின் மற்றும் தைமோசின் ஆகியவை தைராய்டு ஹார்மோன்கள் ஆ) பெப்சின் மற்றும் புரோலாக்டின் இரைப்பையில் சுரக்கின்றது. இ) செக்ரிடின் மற்றும் ரொடாப்ஸின் ஆகியன பாலிபெப்டைடு ஹார்மோன்கள் ஆகும். ஈ) கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டீரோன் ஆகியவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள் ஆகும்.
Answers
Answered by
0
கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டீரோன் ஆகியவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள் ஆகும்
ஹார்மோன்கள்
- தைராய்டு சுரப்பியின் இணை ஃபாலிகுலார் செல்கள் அல்லது C செல்கள் தைரோகால்சிடோனின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது.
- தைமஸ் சுரப்பியானது தைமுலின், தைமோசின், தைமோபாயடின் மற்றும் தைமிக் திரவக் காரணி முதலிய நான்கு ஹார்மோன்களை சுரக்கிறது.
- இரைப்பையில் சுரக்கப்டும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் பெசினோஜனை பெப்சினாக மாற்றுகிறது.
- புரோலாக்டின் குழந்தை பிறப்பிற்கு பிறகு பால் உற்பத்தியினை தூண்டுகிறது.
- இது இரைப்பையில் சுரப்பதில்லை.
- செக்ரிடின் மற்றும் ரொடாப்ஸின் ஆகியன பாலிபெப்டைடு ஹார்மோன்கள் அல்ல.
- கார்டிசோல், டெஸ்டோஸ்டீரோன், ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் மற்றும் ஆல்டோஸ்டீரோன் ஆகியவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள் ஆகும்.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions