பெரியபுராணம் குறிப்பு வரைக?
Answers
Answer:This is a novel written by poet ARUNMOLI THEVAR known as SEKKHILAR
Explanation:
The Periya Puranam, that is, the great purana or epic, sometimes called Tiruttontarpuranam, is a Tamil poetic account depicting the lives of the sixty-three Nayanars, the canonical poets of Tamil Shaivism. It was compiled during the 12th century by SEKKHILAR.
Answer:
பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார். இவர், தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர். இவர், அநபாயச் சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர். இவர், உத்தமச் சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர். இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர் சீர் பரவுவார் என்றும் போற்றுவர். இவரது காலம் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
Explanation:
(பெரியபுராணமும் திருமுறைகளும்)
- பெரிய புராணம் என்பதென்ன என்று அறிவதற்கு, அதற்கும் திருமுறைகள் அல்லது இப்போ பன்னிரு திருமுறைகள் என்று நாம் கருதுவதற்கும் இடையில் உள்ள தொடர்பை (வித்தியாசத்தையும்) அறிதல் வேண்டும்.
- இரண்டும் தமிழ் மொழியில் உள்ளவை. ஆனால் காலத்தால் முந்தியது (முதலில் வந்தது) திருமுறைகளே.
- திருமுறைகள் என்பது தமிழ் நாட்டில் தோன்றிய நாயன்மார்கள், அதாவது சிவ தொண்டர்கள் இயற்றிய, முழுமுதற்கடவுள் சிவபெருமானைப் போற்றும் தோத்திரங்கள். முதலில் இருந்த செயுள் தொகுப்புடன் வேறும் சேர்க்கப் பட்ட பின்னரே அது பன்னிரு திருமுறைகளாயிற்று.
- பெரியபுராணம் என்பது இந்த நாயன்மார்களுடைய வரலாறு. தொண்டர் புராணம் என்றும் இது அழைக்கப் படுகிறது. திருமுறைகளைப் போன்று பெரியபுராணமும் செய்யுள் வடிவிலேயே உள்ளது.
- பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களுடைய வரலாறுகள் சொல்லப்பட்டு உள்ளன.
- இவர்களுள் 25 நாயன்மார்கள் பாடிய தோத்திரங்களும் பெரியபுராணத்தில் இடம் பெறாத மாணிக்கவாச சுவாமிகளின் செயுள்களும், பெரிய புராணச் செயுள்களும் பின்னர் சேர்க்கப்பெற்று, தேவாரம்(திருப்பாட்டு அடங்கலாக 6 தொகுதிகளாக), திருவாசகம்(திருக்கோவையார் அடங்கலாக), திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பிரபந்தம், புராணம் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டு, பன்னிரு திருமுறைகளாக இப்போ வழங்கப் படுகின்றன.
- இதிலிருந்து நாயன்மார்கள் பாடிய தோத்திரங்களுடன், அவர்களின் சரித்திரத்தை பாடும் பெரிய புராணமும் திருமுறைகளில் சேர்க்கப் பட்டுள்ளதை நாம் காணலாம்.
- திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவருக்கு முதலாம் இராச இராச சோழன் தூண்டுதல் ஆகவும் ஆதரவாகவும் இருந்தான். இந்த அரசனுடைய காலம் 11ஆம் நூற்றாண்டு பிற்பகுதியும் 12 ஆம் நூற்றாண்டு முற்பகுதியுமாகும்.
- நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டதினுள் 1௦ திருமுறைகளே அமைந்திருந்தன.
- பெரியபுராணத்தை எழுதியவர் சேக்கிழார் பெருமான். சேக்கிழார் குன்றத்தூர் (முன்னர் தொண்டை மண்டலம், இப்போ சென்னையை அடுத்துள்ள ஓர் ஊர்) என்னும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் கோவிலில் பெரியபுராணத்தைப் பாடினார். இவருக்கு இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆதரவாக இருந்தான். இவ்வரசனுடைய காலம் 12 நூற்றாண்டு பிற்பகுதியாகும்.
- இப்பெரியபுராணம் (periyapuraanam itself) பின்னர் 11 வது திருமுறையாக, திருமுறைகளுள் சேர்க்கப்பட்டது.
- நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப் பட்டதனுள்ளும், பெரிய புராணத்திலும் இடம்பெறாத மாணிக்கவாசகர் இயற்றிய தோத்திரங்கள் திருவாசகம் என்னும் தலைப்பில் 8 ஆம் திருமுறையாக சேர்க்கப்படவே. பெரியபுராணம் 12வது திருமுறையாகி பன்னிரு திருமுறைகள் ஆயிற்று.
- சுத்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டர் தொகையில் 62 நாயன்மார்களை, சிவதொண்டர்களாக குறிப்பிட்டுள்ளார். நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் அந்தாதியில் சுந்தர மூர்த்தி நாயனாரையும் சேர்த்து 63 நாயன்மார்கள் குறிப்பிடப் படுகின்றனர். இந்த 63 நாயன்மார்களுடைய வரலாறுகளையே பெரியபுராணமாக சேக்கிழார் பாடினார். பெரியபுராணம் சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்த ‘உலகெலாம்’ என்ற சொல்லே தொடக்கச்சொல்லாகவும் முடிவுச் சொல்லாகவும் அமையப் பெற்றது. எல்லாமாக 4253 செய்யுள்களைக் கொண்டுள்ளது.
- திருமுறைகள் சிவபெருமானைப் போற்றுபவையாக அமைந்துள்ளன. அம்பாள், பெருமாள், பிரம்மா, பிற கடவுள்களின் நாமங்கள் சிவபெருமானோடு தொடர்புடைவையாகவே இடம் பெற்றுள்ளன. ஆனால் இரு சந்தர்ப்பங்களில் பிற தெய்வங்களைப் போற்றும் பதிகங்கள் உண்டு. பதினோராம் திருமுறையில் கபிலதேவநாயனார் அருளிய மூத்தநாயனார் திரு இரட்டைமணிமாலை பிள்ளையாரை போற்றுவது. நக்கீரரின் திருமுருகாற்றுப்படை முருகனின் அறுபடை வீடுகளுக்களுக்கு எம்மை இட்டுச் செல்வது.
- மாணிக்கவாசக சுவாமிகளின் வரலாறும், சிவபெருமானைத் தவிர பிற தெய்வங்களைப் போற்றும் தோத்திரங்களை பாடியவர்களின் வரலாறுகளும், சந்தான குரவர்களின் வரலாறுகளும், திருமூலரைத்தவிர பிற சித்தர்களின் வரலாறுகளும் பெரிய புராணத்தில் இடம் பெறவில்லை.