கத்தரிச்செடி வகைகள்
Answers
Answer:
கத்தரிச்செடி வளர்ப்பு
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான உணவுகளையும் கத்தரிக்காயை வைத்து சமைக்கலாம். இரும்புச் சத்தும் கால்சியமும் கொண்டது கத்தரிக்காய். வழுதுணங்காய் என்று சங்க இலக்கியங்களில் எழுதப்பட்ட இந்தக் காய், நம் மண்ணுக்கே உரித்தான காய் வகை.
தேவையான பொருட்கள்
தொட்டிகளில் வளர்க்க
மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, கத்தரிச்செடி விதைகள்
நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை உரத்தை தூவி விடுங்கள்.
நடவை முறை
உரங்கள் இட்டு வைத்திருக்கும் தொட்டி(நடுத்தரமான அளவு தொட்டி) மண்ணைக் கிளறி, 35-40 விதைகளைத் தூவுங்கள். விதைகள் முளைத்து, வளர ஆரம்பித்த 30 நாட்களில் கத்தரி நாற்றுகள் தயாராகி விடும். அந்த நாற்றுக்களைப் பிடிங்கி உரமிட்ட தொட்டிகளில் ஒரு தொட்டியில் இரண்டு செடிகள் வீதம் நடவேண்டும். சரியான நிழலும் சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைக்கும் பட்சத்தில் நட்ட 30 நாட்களுக்குள் பூக்கள் வர ஆரம்பிக்கும். அடுத்த 30 நாட்களில் கத்தரிக்காய் காய்க்க ஆரம்பிக்கும்.
பராமரிப்பு
கத்தரி நோய்தாக்குதலுக்கு உள்ளாகும். நோயுள்ள செடிகள் தோட்டத்தில் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது நல்லது. வெள்ளைப்பூச்சி தாக்குதல் இருக்கும் இதற்கு இயற்கை குறையில் தீர்வு காணுங்கள். இதுதவிர காலை, மாலையில் நீர் ஊற்றி வருவது அவசியம்.
எவ்வளவு அறுவடை செய்யலாம்? தொட்டியில் நட்ட 2 மாதத்தில் கத்தரி காய்க்க ஆரம்பிக்கும். 4 தொட்டிகளில் நட்ட செடி மூலம் 3 பேர் அடங்கிய குடும்பத்துக்கு வாரம் இருமுறை குறைந்தது 5 காய்கள் பறிக்கலாம்.