தைராய்டு சுரப்பி அமைப்பைப் பற்றி சுருக்கி எழுதுக.
Answers
Answered by
0
Explanation:
தைராய்டு சுரப்புக் குறை என்பது தைராய்டு சுரப்பியால் போதியளவு தைராய்டு இயக்குநீர் சுரக்கப்படாமையினால், தைராய்டு இயக்குநீரின் தொழிற்பாடு அல்லது அளவு குறைவாக இருப்பதன் காரணமாக ஏற்படும் அகச்சுரப்பித் தொகுதிக் கோளாறு ஆகும். இந்த குறைபாட்டு நிலை பல அறிகுறிகளைக் கொண்டிருக்கும். அவையாவன: குளிரைத் தாங்க முடியாத நிலை, களைப்பு, மலச்சிக்கல், மன அழுத்தம், உடல்நிறை அதிகரிப்பு[1] கருத்தரித்திருக்கும் பெண்களில் தைராய்டு சுரப்புக் குறை இருப்பின், அதற்குத் தகுந்த சிகிச்சை தரப்படாவிட்டால், பிறப்பிலேயே உடல், உள வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தை பிறக்கும். இதனை பிறப்பில் ஏற்படும் அயொடீன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி அல்லது கிரிட்டினிஸம் என்பர்.[2]
Answered by
0
தைராய்டு சுரப்பியின் அமைப்பு
- நமது உடலின் மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பி தைராய்டு சுரப்பி ஆகும்.
- ஓரிணைக் கதுப்புகள் கொண்ட தைராய்டு சுரப்பி மூச்சுக் குழலைச் சுற்றிக் குரல்வளைக்கு கீழே அமைந்து உள்ளது.
- இது வண்ணத்துப்பூச்சியின் வடிவம் உடையது.
- இந்துமஸ் என்ற மையத் திசுத்தொகுப்பினால் தைராய்டு சுரப்பியின் இரு பக்கக் கதுப்புகளும் இணைக்கப்பட்டு உள்ளன.
- ஒவ்வொரு கதுப்பும் அசினி என்ற ஃபாலிகிள்களால் உருவான பல நுண்கதுப்புகளால் ஆனது.
- ஒவ்வொரு அசினசும் (அசினியின் ஒருமைச் சொல்) சுரப்புத் தன்மையுடைய கனசதுர அல்லது தட்டையான எபிதீலிய செல்களை சுவராக கொண்டுள்ளது.
- அசினஸின் உட்பகுதியானது தைரோ குளோபுலின் மூலக்கூறுகளை உடைய அடர்த்தி மிக்க, கூழ்ம, கிளைக்கோ புரதக் கலவையால் நிரம்பியுள்ளது.
Attachments:

Similar questions
Math,
6 months ago
Social Sciences,
6 months ago
Math,
11 months ago
Computer Science,
11 months ago
English,
1 year ago
Chemistry,
1 year ago