அட்ரினல் கார்டெக்ஸின் அடுக்குகளையும் அதன் சுரப்புகளையும் எழுதுக.
Answers
Answered by
0
Answer:
அட்ரீனல் கோர்டெக்ஸ் மூன்று மண்டலங்கள் அல்லது அடுக்குகளைக் கொண்டுள்ளது: சோனா குளோமெருலோசா (வெளி), சோனா பாசிக்குலாட்டா மற்றும் சோனா ரெட்டிகுலரிஸ். வெளிப்புற அடுக்கு, ஜோனா குளோமெருலோசா, மினரல் கார்டிகாய்டுகள், முக்கியமாக ஆல்டோஸ்டிரோன் உற்பத்திக்கான முக்கிய தளமாகும். சோனா பாசிக்குலாட்டா என்பது குளோமெருலோசா மற்றும் ரெட்டிகுலரிஸுக்கு இடையில் அமைந்துள்ள அடுக்கு ஆகும்.
Answered by
0
அட்ரினல் கார்டெக்ஸின் அடுக்குகள் மற்றும் அதன் சுரப்புகள்
- அட்ரினல் கார்டெக்ஸ் திசுவியல் அடிப்படையில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே சோனா குளாமருலோசா, சோனா ஃபாஸிகுலேட்டா மற்றும் சோனா ரெடிகுலாரிஸ் ஆகும்.
- 15% உள்ள அட்ரினல் கார்டெக்ஸின் வெளிப்பகுதியான மெல்லிய சோனா குளோமருலோசா என்ற பகுதியில் தாது கலந்த கார்டிகாய்டு ஹார்மோன் சுரக்கப்படுகிறது.
- அதே போல 75% உள்ள கார்டெக்ஸின் அகன்ற நடுப்பகுதியான சோனா ஃபாஸிகுலேட்டா என்ற பகுதியில் குளுக்கோ கார்டிகாய்டுகளாக காரிடிசோல், கார்டிகோஸ்டீரோன் என்ற ஹார்மோன், மிகக் குறைந்த அளவு அட்ரினல் ஆன்ட்ரோஜன் மற்றும் எஸ்ட்ரோஜன் முதலியன ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன.
- 10% அளவுடைய உட்பகுதியான சோனா ரெட்டிகுலாரிஸில், அட்ரினல் ஆன்ட்ரோஜன், குறைந்த அளவு எஸ்ட்ரோஜன் மற்றும் குளுக்கோ கார்டிகாய்டுகள் முதலியன சுரக்கப்படுகின்றன.
Attachments:
Similar questions