அட்ரினலின் ஹார்மோன் பணிகளை விவாதி.
Answers
Answered by
0
please ask in English/Hindi
Answered by
0
அட்ரினலின் ஹார்மோன் பணிகள்
- குளுக்கோ கார்டிகாய்டுகள் ஆனது குளுக்கோஸ் அல்லாத பொருட்களில் இருந்து குளுக்கோஸ் உருவாக்கம், கொழுப்புச் சிதைவு மற்றும் உயிர் காப்பு நிகழ்வான புரதச் சிதைவு முதலிய செயல்களை செய்கின்றன.
- அட்ரினல் மெடுல்லா ஆனது பறத்தல், பயம் மற்றும் சண்டை முதலியனவற்றோடு தொடர்பினை கொண்ட அட்ரினலின் மற்றும் நார் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களைச் சுரக்கின்றன.
- இந்த ஹார்மோன் ஆனது 3F (Flight, Fight & Fright hormone) ஹார்மோன் என அழைக்கப்படுகிறது.
- அட்ரினலின் கல்லீரலில் உள்ள கிளைக்கோஜனை சிதைத்து குளுக்கோஸாக மாற்றுகிறது.
- மேலும் அட்ரினலின் ஹார்மோன் கொழுப்பு சேமிப்பு செல்களில் உள்ள கொழுப்பை, கொழுப்பு அமிலங்களாகச் சிதைத்து வெளியேற்றுதலையும் தூண்டுகின்றது.
- அட்ரினலின் ஹார்மோன் நெருக்கடி காலத்தில் இதயத் துடிப்பு வீதம் மற்றும் இரத்த அழுத்தத்தை உயர்த்துகின்றது.
Similar questions