இரத்த அழுத்தத்தை அளக்கும் கருவி அ) ஸ்டெத்தஸ்கோப் ஆ) ஹீமோசைட்டோமீட்டர் இ) ஸ்பிக்மோமானோமீட்டர் ஈ) ஹீமோகுளோபினோமீட்டர்
Answers
Answered by
0
ஸ்பிக்மோ மானோ மீட்டர்
- இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவி ஸ்பிக்மோ மானோ மீட்டர் ஆகும்.
- இதனால் ஸ்பிக்மோ மானோ மீட்டர் ஆனது இரத்த அழுத்தமானி அல்லது இரத்த அழுத்தக் கண்காணிப்புக் கருவி அல்லது இரத்த அழுத்த அளவீட்டுக் கருவி என அழைக்கப்படுகிறது.
- ஸ்பிக்மோ மானோ மீட்டரில் உள்ள இரப்பர் பட்டையானது மேற்கையில் சுற்றப்படும்.
- இந்த இரப்பர் பட்டையுடன் சேர்ந்து உள்ள இரப்பர் குழாயின் மறுமுனை பாதரச அளவு கோலுடன் இணைக்கப்பட்டு உள்ளதால் இரத்த அழுத்தத்தினை நேரடியாக ஒரே சீராக பகுக்கப்பட்ட அளவு கோல் வழியே அளவிட இயலும்.
- கைப் பட்டையினுள் உள்ள காற்றின் அழுத்தத்தினை படிப்படியாக கூட்டியும், குறைத்தும் இரத்த அழுத்தத்தினை கணக்கிடலாம்.
Attachments:
Similar questions