Biology, asked by anjalin, 6 months ago

‌ஸ்டெ‌த்த‌ஸ்கோ‌ப்‌பின் பய‌ன்களை ‌வ‌ரிசை‌ப்படு‌த்து.

Answers

Answered by Anonymous
1

Answer:

இதயத்துடிப்பு மானி (stethoscope) என்பது ஒரு மருத்துவ உபகரணம் ஆகும்.

இது மனிதன் அல்லது விலங்கின் உடலின் உட்பகுதியில் ஏற்படும் சப்தங்களைக் கேட்க மருத்துவர்களால் உபயோகிக்கப்படுகிறது.

இது பெரும்பாலும் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை ஏற்படுத்தும் சப்தங்களைக் கேட்கப் பயன்படுத்தப்படுகிறது.

இது மேலும் தமனி மற்றும் சிரையில் உள்ள இரத்த ஓட்டத்தின் சப்தத்தைக் கேட்கவும் பயன்படுகிறது.

மேலும் இத்தகைய இதயத்துடிப்பு மானிகள் உள்ளீடற்ற கலன்களின் (vacuum chambers) கசிவை அறியவும் உதவுகின்றன.

உடலில் இதயம் இருக்கும் மார்புப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் வைத்து பொதுவாக மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது.

Answered by steffiaspinno
0

ஸ்டெ‌த்த‌ஸ்கோ‌ப்‌பின் மரு‌த்துவ பய‌ன்க‌ள்

  • இதய‌த்துடி‌ப்பு, உ‌ட்சுவாச‌ம் ம‌ற்று‌ம் வெ‌ளி‌ச் சுவாச‌த்‌தி‌ன் போது நுரை‌யீர‌லி‌ல் உருவாகு‌ம் ஒ‌லி, இரை‌ப்பை, குட‌ல் அசைவு ஒ‌லிக‌ள் ம‌ற்று‌ம் கரு‌‌ப்பை‌யினு‌ள் கரு‌வி‌ன் அசை‌வினா‌ல் உருவாகு‌ம் ஒ‌லி ஆ‌கிய‌வ‌ற்‌றினை கே‌‌ட்டு உணர‌ப் பய‌ன்படு‌ம் மரு‌த்து‌க் கரு‌வியே ‌ஸ்டெ‌த்த‌ஸ்கோ‌ப் ஆகு‌ம்.
  • இத‌ய‌த்‌தி‌ல் உருவாகு‌ம் சாதாரண ம‌ற்று‌ம் அசாதாரண ஒ‌லிக‌ள் ம‌ற்று‌ம் இதய வா‌ல்வுக‌ள் செய‌ல் ‌வித‌ம் ஆ‌கியவ‌ற்‌றினை க‌ண்ட‌றிய ஸ்டெ‌த்த‌ஸ்கோ‌ப்‌ பய‌ன்படு‌‌கிறது.
  • ச‌ளி‌க் கா‌ய்‌ச்ச‌ல், நுரை‌யீர‌ல் ‌வீ‌க்க‌ம், மூ‌ச்சு‌க் குழ‌ல் ‌வீ‌க்க‌ம், நுரை‌யீர‌ல் உறை ‌வீ‌க்க‌ம் முத‌லிய நுரை‌யீர‌ல் நோ‌ய்களை க‌ண்ட‌றிய ஸ்டெ‌த்த‌ஸ்கோ‌ப்‌ பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
  • ஸ்டெ‌த்த‌ஸ்கோ‌ப்‌ ஆனது இர‌த்த அழு‌த்தமா‌னிக‌ள் உட‌ன் சே‌ர்‌ந்து இர‌த்த அழு‌த்த‌த்‌தினை க‌ண்டு அ‌றிய பய‌ன்படு‌கிறது.
  • ஸ்டெ‌த்த‌ஸ்கோ‌ப்‌ ஆனது இதய, சுவாச ம‌ற்று‌ம் குட‌ல் ச‌ம்ம‌ந்தமான குறைபாடுக‌ளி‌ன் ‌நிலைமை‌யினை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள உதவு‌கிறது.  
Attachments:
Similar questions