India Languages, asked by ramyabalaji3124, 9 months ago

சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?​

Answers

Answered by revsselva25
10

Answer:

சொல் நான்கு வகைப்படும். அவை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்

Answered by presentmoment
9

Answer:

தமிழில் சொற்கள் நான்கு வகைப்படும்.

Explanation:

தமிழில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை :

1) பெயர்ச்சொல்

2) வினைச்சொல்

3) இடைச்சொல்

4) உரிச்சொல்

1) பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.

2)வினைச்சொல் என்பது, பொருளினது செயலை உணர்த்தும் சொல்லாகும்.

வினை, தொழில், செயல் என்பவை ஒரு பொருள் குறித்த சொற்கள்.

3)இடைச்சொல் என்பது பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாதது,இது பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொல்லாகும்.

4)உரிச்சொல் என்பது, பொருளுக்கு உரிமை உடைய பண்பை உணர்த்தும் பெயராகும்.

Similar questions