Biology, asked by anjalin, 7 months ago

‌கீ‌ழ்வருவனவ‌ற்று‌ள் ம‌ண்புழு உர உ‌ற்ப‌த்‌தி‌‌யி‌ல் தொட‌ர்ப‌ற்றது எது? அ) ம‌ண் வள‌த்தை‌ப் பாதுகா‌‌த்த‌ல் ஆ) க‌னிம‌ப் பொரு‌ட்களை ‌சிதை‌த்த‌ல் இ) துளைக‌ள், கா‌ற்றோ‌ட்ட‌ம் ம‌ற்று‌ம் ஈர‌ப்பத‌த்தை த‌க்க வை‌த்த‌ல் த‌ன்மை போ‌ன்றவ‌ற்றை அ‌ளி‌க்‌கி‌ன்றது ஈ) உ‌யி‌ரிய‌ல் ‌சிதைவு‌க்கு‌ட்படாத க‌ரிம‌ங்களை ‌சிதை‌க்‌கி‌ன்றது. அ) அ ம‌ற்று‌ம் ஆ ச‌ரி ஆ) இ ம‌ற்று‌ம் ஈ ச‌ரி இ) ஆ ம‌ற்று‌ம் ஈ தவறு ஈ) அ ம‌ற்று‌ம் இ தவறு

Answers

Answered by manya00780
0
மண்புழுக்கள் நமது பூமியில் 20 மில்லியன் ஆண்டுகளாக வாழ்கின்றன. இவை தமது பணியைச் செவ்வனே செய்வதன் மூலம் வாழ்க்கைச் சுழற்சியானது தொடர்ந்து நடைபெறுகிறது. மண்புழுக்களின் பணி எளிதானதாக இருப்பினும் இது மிகவும் இன்றியமையாதது. மண்புழுக்கள் இயற்கையாகவே இறந்த திசுக்களில் உள்ள கரிமச் சத்துப் பொருட்களை மறுசுழற்சி முறையில் திரும்பவும் உயிரினங்களுக்கு அளிக்கின்றன. இவை மண்ணில் உள்ள அழுகிய மற்றும் மக்கிய பொருட்களை உண்டு வாழ்கின்றன. செரிமானமாகாத பொருள்கள் மண்புழுக்களின் உணவுக்குடலின் வழியே செல்லும் போது வேதிவினைக்கு உட்படுத்தப்பட்டு நடுநிலையாக்கப்படுகின்றன. இதன் மூலம் கரிமக் கழிவுப் பொருட்கள் வாசனையற்ற இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன. மண்புழு உரம் என்பது கரிமக் கழிவுப் பொருட்களைப் புழுவார்ப்புகளாக மாற்றும் முறையாகும். புழுவார்ப்புகள் மண் வளத்திற்கு மிகவும் முக்கியமானவை. புழுவார்ப்புகளில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிக அலவில் உள்ளன. மேல் மண்ணில் இருப்பதை விடப் புழுவார்ப்புகளில் நைட்ரஜன் 5 மடங்கும், பொட்டாசியம் 7 மடங்கும் மற்றும் கால்சியம் 1 1/2 மடங்கும் அதிகமாக உள்ளன. மண்புழு வார்ப்புகளில் சிறந்த காற்றோட்டம், உறிஞ்சும் தன்மை, சிறந்த கட்டமைப்பு, வடியும் தன்மை, ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் திறன் இருப்பதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மண்புழுக்களின் மண்ணைத் துளைத்துச் செல்லும் பாங்கு மற்றும் புழுவார்ப்புகளில் உள்ள பொருட்கள் பொருட்கள் மண்ணில் நீர் உட்செலுத்தும் திறனை அதிகரிக்கின்றன. மண்புழு உரம் தயாரித்தல் சிறிய மற்றும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Answered by steffiaspinno
0

ஆ ம‌ற்று‌ம் ஈ தவறு

ம‌ண்புழு உர‌ம் தயா‌ரி‌த்த‌ல்  

  • ம‌ண்புழு உர‌ம் எ‌ன்பது நா‌ங்கூ‌ழ் க‌ட்டிக‌ள், ம‌ண்புழு‌க்க‌ளி‌ன் தள‌ப்பொரு‌ள் ‌சிதைவுக‌ள் ம‌ற்று‌ம் இதர க‌ரிம‌ப் பொரு‌ட்க‌ள் முத‌லியன அட‌ங்‌கிய ஒரு கலவை ஆகு‌ம்.
  • ம‌ண்‌ணி‌ல் உ‌ள்ள க‌ரிம‌க் க‌ழிவுக‌ள் ம‌ண்புழு‌வினா‌ல் ‌சிதை‌க்க‌ப்ப‌‌ட்டு, ஊ‌ட்ட‌ச்ச‌த்து உ‌ள்ள உட‌ல் க‌ழிவாக, வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌ம் பொரு‌ட்கள் நா‌ங்கூ‌ழ் க‌ட்டிக‌ள் ஆகு‌ம்.
  • ம‌ண்புழு‌க்க‌ள் க‌ரி‌ம‌ப் பொரு‌ட்களை‌ச் ‌சிதை‌த்த ‌பிறகு அத‌ன் உட‌லி‌லிரு‌ந்து வெ‌ளியேறு‌ம் பொருளே ம‌ண்புழு க‌ழிவு ஆகு‌ம்.
  • நு‌ண்‌ணிய துக‌ள்களை கொ‌ண்ட இ‌ந்த க‌ழிவு‌ப் பொரு‌ள் ஆனது நு‌ண் துளைக‌ள், கா‌ற்றோ‌ட்ட‌ம், ‌நீ‌ர் வடிகா‌ல் ம‌ற்று‌ம் ஈர‌ப்பத‌த்‌தினை த‌க்க வை‌க்கு‌ம் ‌திற‌ன் முத‌லிய ப‌ண்புகளுட‌ன் ‌சிற‌ந்த க‌ரிம உரமாக பய‌ன்படு‌கிறது.  
Similar questions