விதை அரக்கு என்றால் என்ன?
Answers
Explanation:
சிவசக்தி துணை. "அரக்கு என்பது என்ன? அதன் அன்றாட வாழ்வின் பயன்கள் யாவை?"
அரக்கு என்பது அரக்குப் பூச்சிகளிலிருந்து வெளிப்படும் ஒருவகை திரவம் காற்றில் உலர்ந்து இயற்கைப் பிசின் அரக்காகிறது. அரக்கு நீரிலும் எண்ணெயிலும் கரையாது. ஒட்டும் தன்மையும் நீளும் தன்மையும் கொண்டது. பெண் பூச்சிகளின் உடலிலிருந்து பிசின் போன்ற திரவம் சுரந்து மரக் கிளைகளில் படிகிறது. இக்கிளையை வெட்டியெடுத்து அவற்றில் உள்ள அரக்கைச் சுரண்டி எடுப்பார்கள் இதுவே 'கொம்பரக்கு' எனப்படும். பின் அதனை கொதிக்கும் நீரில் போட்டு அதிலுள்ள அசுத்தங்களை அகற்றுவார்கள். இவ்வாறு சுத்தம் செய்த அரக்கு 'மணியரக்கு' எனப்படுகிறது. மணியரக்கை மேலும் தூய்மைப்படுத்தி தகடு வடிவில் தயாரிப்பார்கள். இது 'தகடரக்கு' என்று அழைக்கப்படுகிறது.
அரக்கிலிருந்து பல்வேறு பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.
இசைத்தட்டுகள்,மரச்சாமான்கள், மின்தடைச் சாதனங்களின் மேல் பூச்சு, காகித அட்டைகள், நகச்சாயங்கள், கை வளையல்கள் ஆகியன தயாரிக்க அரக்கு பயன்படுகிறது.
நீண்ட காலமாக அரக்குச்சாயம், கம்பளி, பட்டு, தோல் ஆகியவற்றுக்கு வண்ணம் பூசப் பயன்பட்டு வந்துள்ளது.
மெருகெண்ணெய், வர்ணக்குச்சிகள், முத்திரைஅரக்கு ஆகியவைகளும் அரக்கு கொண்டு உருவாகும் பொருள்களே ஆகும்.
இசைக்கருவி, தாமிரப் பாத்திரங்கள் விளையாட்டுப் பொருள்கள், நாற்காலி போன்றவைகளுக்கு மெருகேற்றவும் அரக்கு பயன்படுகிறது.
கொம்பரக்கும், மணியரக்கும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகின்றன.
விதை அரக்கு
- கருங்காலி, கருவேலை, கும்பாதிரி முதலிய அரக்குப்பூச்சிகள் வளரும் மரங்கள் ஆகும்.
- மொய்த்திரளுக்கு முன்போ அல்லது பின்போ ஓம்புயிரி தாவரத்திலிருந்து நன்கு உருவான அரக்கினை சேகரித்தல் அறுவடை செய்தல் ஆகும்.
- முதிராத பூச்சியிலிருந்து சேகரிக்கப்படும் அரக்கு அரி அரக்கு எனவும், முதிர் பூச்சியிலிருந்து சேகரிக்கப்படும் அரக்கு முதிர் அரக்கு எனவும் அழைக்கப்படுகிறது.
- குச்சி அரக்கு என ஓம்புயிரி தாவரக் குச்சியிலிருந்து எடுக்கப்படும் அரக்கு அழைக்கப்படுகிறது.
- மரக்கிளைகளில் காணப்படுகின்ற அரக்கு ஆனது சுரண்டி சேகரிக்கப்படுகிறது.
- அரக்கினை அரைத்த பிறகு தேவை இல்லாத பொருட்களான தூசுகள், மற்ற நுண்ணிய பொருட்கள் முதலியன நீக்கப்படுகிறது.
- தற்போது உருவாகும் தூய்மையான அரக்கு ஆனது வித்து அரக்கு அல்லது விதை அரக்கு எனப்படுகிறது.