ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
ஹோமினின்
- ஹோமினின் என்பது தற்கால மனிதனுக்கு மிக நெருக்கமான தோற்றத்தினை கொண்டு இருந்த மனித மூதாதையர்கள் ஆவர்.
- ஆப்பிரிக்காவில் ஹோமினின்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
- எனினும் இந்தியாவில் ஹோமினின்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அரிதாகவே உள்ளன.
- இராபர்ட் ப்ரூஸ் ஃபூட் அவர்கள் அதிரம்பாக்கத்தில் ஹோமினின்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக கருதப்படும் புதைப்படிவத்தின் ஒரு பகுதியினை கண்டெடுத்ததாக சொல்லப்படுகிறது.
- மத்திய பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகே உள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதே இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதைபடிவம் ஆகும்.
- அது ஒரு மண்டை ஓட்டின் மேல்பகுதி ஆகும்.
- இதை நர்மதை மனிதன் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளமாக இந்த மண்டை ஓடு கருதப்படுகிறது.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
9 months ago
English,
9 months ago