Science, asked by ajayvasan73, 8 months ago

குண்டும் குழியுமாக இருக்கும் உம் பகுதிக்கு சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுகஸ்ர.​

Answers

Answered by kikibuji
10

Answer:

அனுப்புநர்:

ரா.மஹிமா,

39, அண்ணா நகர்,

மதுரை.

பெறுநர்:

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மதுரை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் :குண்டும் குழியுமாக இருக்கும் எங்கள் பகுதியின் சாலையைச் சீரமைக்க வேண்டுகோள்.

ஐயா, நாங்கள் வாழும் பகுதி அண்ணா நகரில் உள்ளது. இங்கு ஐம்பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இரயில் நிலையம் , பேருந்து நிலையம் , மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவற்றிற்குச் செல்ல மக்கள் பெரிதும் இச்சாலையைப் பயன்படுத்துகின்றனர். பிற பகுதியைச் சேர்ந்தவர்களும் இச்சாலை வழியே தான் அலுவலகங்கள் முதலியவற்றிற்குச் செல்கின்றனர்.

ஆனால் கடந்த மாதம் பெய்த மழையால் சாலை பிளவுற்று , குண்டும் குழியுமாக உள்ளது. மக்கள் இதனால் பெரிதும் அவதியுறுகின்றனர். சாலை சீரற்று இருப்பதால், சில சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனை ஊர்தி கூட இங்கு வருவதற்குச் சிரமமாக உள்ளது. மக்களால் இன்றியமையாத வேலைகளுக்கு உடனே செல்ல இயலவில்லை.

ஆகையால் , பெரும் விபத்து ஏற்படாத வண்ணம், மக்கள் நலத்தினைக் கருத்திற்கொண்டு , இச்சாலையை விரைவில் சீரமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இடம்: மதுரை இப்படிக்கு,

தேதி:21.8.2020 தங்கள் உண்மையுள்ள

ரா. மஹிமா.

ஊர்மக்கள் கையொப்பம்

1. ஹரி

2. கார்த்திகா

3. சாரா

4. மோஹன்

Similar questions