கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.
Answers
Answered by
1
Answer:
google இல் பார்க்கவும்
Answered by
0
கீழ் மற்றும் இடைப் பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுதல்
கீழ் பழங்கற்காலப் பண்பாடு
- கீழ் பழங்கற்காலக் கருவிகளை சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ் பூட் கண்டெடுத்தார்.
- கீழ் பழங்கற்காலப் பண்பாடு ஆனது சென்னைக்கு ஆரகில் உள்ள அத்திரம்பாக்கம், பல்லாவரம், குடியம், மத்திய பிரதேசத்தில் உள்ள பிம்பெட்கா, கர்நாடகாவில் உள்ள இசாம்பூர் முதலிய பகுதிகளில் பரவி உள்ளது.
- கீழ் பழங்கற்காலப் பண்பாட்டினை சார்ந்த மக்கள் கற்களைச் செதுக்கி கோடாரிகள், துண்டாக்கும் கருவிகள், பிளக்கும் கருவிகள் முதலியனவற்றினை உருவாக்கினர்.
இடைப் பழங்கற்காலப் பண்பாடு
- இடைப் பழங்கற்காலக் கருவிகளை நெவாசா என்ற இடத்தில் உள்ள பிரவாரா ஆற்றங்கரையில் சங்கலியா என்பவர் கண்டெடுத்தார்.
- இடைப் பழங்கற்காலப் பண்பாடு ஆனது யமுனை, நர்மதை, கிருஷ்ணா, கோதாவரி முதலிய ஆறுகளின் சமவெளிகளில் பரவி உள்ளது.
- இடைப் பழங்கற்காலப் பண்பாட்டினை சார்ந்த மக்கள் சுரண்டும் கருவிகள், துளையிடும் கருவிகள், அரம் போன்ற கருவிகள் மற்றும் செதுக்கும் கத்தியினை உருவாக்கினர்.
Similar questions