தண்ணீர் பாடத்தை சுருக்கி எழுதுக
Answers
இந்திரா இதில் படுகெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக இடம்பிடித்ததோடு மட்டுமில்லாமல், பதட்டமேயில்லாமல் அலட்சியமாக நிற்கிற அழகைப் பார்த்தால் ஐந்தாறு வருசங்களாக அதே இடத்தில் நிற்பது போல இருந்தது. இடம் பிடிக்க முடியாத பெண்கள் சுவர்களில் சாய்ந்துகொண்டு எகத்தாளம் பேசினார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளை உடைகளோடும் பச்சைக் கொடியோடும் வந்தவர் இந்த சச்சரவைப் பார்த்துவிட்டு, ‘ஒரு நாளைக்கு ஸ்குவார்டை வரச்சொல்லி எல்லோரையும் அள்ளிக்கிட்டுப் போயி ஜெயில்ல போடுறேன்’ ‘ என்றார். பெண்கள் இடுப்புக் குடங்களுக்குள் முகங்களைக் கவிழ்த்து வக்கணையாகச் சிரித்தார்கள்.
ரயில் சத்தம் நெருங்கிக் கொண்டிருக்கையில் இந்திராவைப் படாரென்று தள்ளிவிட்டு, அந்த இடத்தில் டெய்லர் மகள் ராணி நின்று கொள்ள முயன்றாள். இந்திரா கொஞ்சம் தடுமாறிவிட்டு அவளை அலாக்காகத் தூக்கிப் போட்டுவிட்டு மறுபடி வந்து நின்றுவிட்டாள். கீழேவிழுந்த டெய்லர் மகள் ஆங்காரமாக ஒடிவந்துஇந்திராவின் தலைமுடியைப் பிடித்தாள். இந்திரா அவளைக் குடத்தால் முதுகில் அடித்தாள். அடிக்குப் பயந்து குனிகிறாளென்று நினைத்து நிமிர்ந்தவளுக்கு முழங்கையில் சுரீரென்று வலித்தது. டெய்லர் மகள் கடித்துவிட்டாள். பல் பதிந்துவிட்டது. அவளைக் காலால் எத்திவிட்டாள் இந்திரா.
ரயில், காட்டுயானை பிளிறிக்கொண்டு வருவதுபோல் நிலையத்துக்குள் நுழைந்தது. பயணிகள் யாரும் இறங்கு முன்பாக இந்திரா குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி செம்பில் தண்ணீர் பிடித்தாள். செம்பு பாதி நிறையுமுன் குடத்தில் ஊற்றினாள். ஊற்றிய வேகத்தில் மறுபடி செம்பில் பிடித்தாள்.
PLS MARK BRAINLIST
தண்ணீர் பாடத்தை சுருக்கம்
- தண்ணீர் – கந்தர்வன்
முன்னுரை :
- “நாகலிங்கம்” என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர்.
- “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்’ முதலிய வரிசையில் “தண்ணீர்” சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.
குடிநீரற்ற ஊரின் நிலை :
- தனிமனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீருக்கே அல்லாடும் ஒரு சிற்றூர் அது. அவ்ஊருக்கும் இயற்கைக்கும் நிரந்தரப்பகை, புயல் வந்தால்3. பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.
- பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.
- எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.
இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
- இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது.
- இரயில் three three.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.
- அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இடம் பிடிக்க இயலாத பெண்கள் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எகத்தாளம் பேசுவர். ஸ்டேஷன் மாஸ்டர் மிரட்டியும் கூட்டம் அடங்காது. இந்த இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்குத்தான் ஓட வேண்டும் என்பதால் முண்டியடித்து இரயில் பெட்டிக்குள் ஏறினர்.
இந்திராவின் கனவு :
- அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.
இந்திரா தண்ணீர் பிடித்தல் :
- பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள், சனியன், பீடை பிடித்த குடம் நிறைகிறதா என்று சலித்துக் கொண்டே குழாயை மேலும் அழுத்தினாள். இன்னும் குடம் நிறையவில்லை
கதை உணர்த்தும் கருப்பொருள் :
- இச்சிறுகதை “நீரின்றி அமையாது உலகு” என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.
- 21-ஆம் நூற்றாண்டை எட்டிப்பிடித்துள்ள இன்றைய நிலையில், குடிநீர் நெருக்கடி உச்சத்தில் இருப்பதையும், சிற்றூர்களின் மக்களின் வாழ்க்கை ஒரு வாய் தண்ணீருக்குக் கூட வழியற்றதாய், சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதை படிப்போர் நெஞ்சில் உணர்த்தும் வகையில் ‘கந்தர்வன்’ எழுதியுள்ளார்.
“சிற்றூரின் தேவைகள் இன்றளவும்
நிறைவு செய்யப்படுவதில்லை.”
முடிவுரை :
“உயிர் நீர்” எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,
“நீர் மேலாண்மையை கட்டமைப்போம்
மழைநீர் சேகரிப்போம்.”
#SPJ2