ஜென்ட் அவெஸ்தாவைப் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
பார்சி (Parsi) அல்லது பார்சீ (Parsee) (ஒலிப்பு: /ˈpɑrsiː/) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இரண்டு மிகப்பெரிய ஜோரோஸ்ட்ரிய (Zoroastrian) சமுதாயத்தினரைக் குறிப்பிடுவதாகும். இவர்களின் புனித நூல் அவெத்தா ஆகும். தொடக்கத்தில் பார்சி எனும் சொல்லைப் பண்டைய பெர்சியர்கள் தங்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.
Answered by
0
ஜென்ட் அவெஸ்தா
- ஜென்ட் அவெஸ்தா என்பது ஜொராஸ்டிரிய மதத்தினை சார்ந்த பாரசீக அல்லது ஈரானிய நூல் ஆகும்.
- ஜென்ட் அவெஸ்தா என்ற நூலில் இந்தோ - ஈரானிய மொழிகளைப் பேசி வாழ்ந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அந்த மக்கள் வணங்கிய கடவுள்கள் முதலியன பற்றிய பல செய்திகள் உள்ளன.
- மேலும் இந்த நூலில் இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளை பற்றிய குறிப்புகளும் இடம்பெற்று உள்ளன.
- இந்த நூலில் இடம்பெற்ற சொற்கள், வேத நூல்களின் சமஸ்கிருதச் சொற்களுடன் மொழி ஒப்புமை கொண்டு உள்ளது.
- மேலும் ஜென்ட் அவெஸ்தா என்ற நூல் ஆனது இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்து உள்ள ஆரியர்களின் தொடக்கக் கால வாழிடங்கள் பற்றி அறிந்து கொள்ள தேவையான துணைச் சான்றுகளை கொண்டு உள்ளது.
Similar questions
Accountancy,
4 months ago
Social Sciences,
4 months ago
Geography,
4 months ago
Physics,
9 months ago
Chemistry,
9 months ago
Math,
1 year ago