அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பெளத்த நூல் _______ ஆகும். அ) சீவக சிந்தாமணி ஆ) அச்சரங்கசூத்திரம் இ) கல்ப சூத்திரம் ஈ) சமண்ணப சுத்தம்
Answers
Answered by
0
Explanation:
पहले इस भाषा को कन्वर्ट करके दो
Answered by
0
சமானபல சுத்தா
அவைதீக மதங்கள்
- அஜாத சத்ரு என்ற பேரரசர் மற்றும் பெளத்த மதத்தினை தோற்றுவித்த கெளதம புத்தர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பெளத்த நூல் சமானபல சுத்தா ஆகும்.
- புத்தரைச் சந்தித்ததற்கு முன்பு, அஜாத சத்ரு அவர்கள் புராண கசபர், மக்காலி கோசலர், அஜிதகேச கம்பளி, பகுத கச்சாயனர், சஞ்சய பெலதிபுத்தர், நிகந்த நடபுத்தர் (மகாவீரர்) போன்ற பிற மதப் பிரிவு தலைவர்களுடன் தத்துவ விவாதங்கள் செய்ததாக சமானபல சுத்தா என்ற நூல் குறிப்பிடுகிறது.
- இவர்கள் நீண்ட காலமாக வீடற்று சுற்றித் திரிந்தவர்கள் (சிர-பப்பாஜிதோ), மதங்களை உருவாக்கியவர்கள் (தீத்தகரோ), தங்களுடைய நெறிமுறைகளின் தலைவர்கள் (ஞானாசாரியோ) என குறிப்பிடப்படுகிறார்கள்.
- மேற்கண்ட பெளத்த மதத்தின் போட்டி மதங்களை அஜாத சத்ரு ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், பெளத்த மதத்தினையே அவர் ஏற்றுக்கொண்டதாகவும் சமானபல சுத்தாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
World Languages,
8 months ago
English,
11 months ago
Math,
11 months ago