தமிழ்நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
தமிழ்நாட்டில் சமணம்
- தமிழ்நாட்டில் சமணம் பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
- சமணத் துறவிகள் தங்கிய கற்படுக்கைகளோடு கூடிய குகைகள் மதுரை மற்றும் பிற இடங்களில் உள்ள குகைகளில் அதிக அளவில் உள்ளன.
- நாலடியார், பழமொழி, சீவக சிந்தாமணி, யாப்பெருங்கலக் காரிகை, நீலகேசி முதலியன தமிழின் முதன்மையான சமண நூல்கள் ஆகும்.
- பூஜ்யபாதா என்பவரின் சீடரான வஜ்ரநந்தி என்பவரால் பொ.ஆ. 470ல் ஒரு திராவிட சமணச் சங்கம் மதுரையில் நிறுவப்பட்டது.
- தமிழகத்தில் சமணம் பரவியதன் விளைவாக பல சமணக் கோயில்கள் உருவாகின.
- தமிழக சமணக் கோயிலுக்கு உதாரணமாக காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள அழகான மேற்கூரை ஓவியங்களுடன் கூடிய திருப்பருத்திக்குன்றம் கோயிலை கூறலாம்.
- காஞ்சிபுரத்தில் உள்ள இந்த பகுதி சமணக்காஞ்சி என அழைக்கப்படுகிறது.
Attachments:
Similar questions