_______ என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது. அ) முத்ராராட்சசம் ஆ) ராஜதரங்கிணி இ) அர்த்தசாஸ்திரம் ஈ) இண்டிகா
Answers
Answered by
0
முத்ரா ராட்சசம்
- முத்ரா ராட்சசம் என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திர குப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.
- முத்ரா ராட்சசம் என்ற நாடக நூல் ஆனது பொ.ஆ. நான்காம் நூற்றாண்டிற்கு சிறிது காலத்திற்கு பிறகு குப்தர்கள் காலத்தில் எழுதப்பட்டது ஆகும்.
- முத்ரா ராட்டசம் ஆனது அரியணையில் அமர்ந்த சந்திர குப்தருக்கு எதிரான படையெடுப்புகளை தடுக்க அவரின் தலைமை ஆலோசகர் சாணக்கியர் அல்லது கெளடில்யர் சொன்ன ஆலோசனைகள், அவர் செய்த யுக்திகளை பற்றி கூறுகிறது.
- இந்த நாடகம் சந்திர குப்தர் பற்றி மற்ற சமகால ஆதாரங்களிலிருந்து திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால், இதனை ஓர் சந்திர குப்தரை பற்றி உறுதிப்படுத்தும் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.
Similar questions