மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
1
மகாபத்ம நந்தர்
நந்தர்கள்
- இந்தியாவில் முதல் பேரரசினை உருவாக்கியவர்கள் நந்த வம்சத்தினை சார்ந்தவர்கள் ஆவர்.
- பிம்பிசாரரின் மகனான அஜாதசத்ருவின் மறைவிற்கு பிறகு சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு பொ.ஆ.மு 362ல் நந்தர்கள் மகதப் பேரரசின் அரசர்களான அரியணை ஏறினர்.
- மகாபத்ம நந்தர் முதல் நந்த அரசராக பதவி ஏற்றார்.
- இவர் 50 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த சிசுநாகர்களை தோற்கடித்து அவர்களை கொன்ற அரியணையை கைப்பற்றியதாக நம்பப்படுகிறது.
- மகாபத்ம நந்தரின் ஆட்சியின் கீழ் மகத பேரரசின் எல்லை நன்கு விரிவடைந்தது.
- நந்தர்களின் செல்வமும், அதிகாரமும் எதிரிகளை பயமுறுத்தும் வகையில் இருந்தது.
- மகாபத்ம நந்தருக்கு மொத்தம் 8 புதல்வர்கள் இருந்தனர்.
- மகாபத்ம நந்தரை தொடர்ந்த அவரின் 8 புதல்வர்கள் மகதத்தினை ஆட்சி புரிந்தனர்.
Similar questions