தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.
Answers
Answered by
1
தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகள்
- பொதுவாக நகரங்கள் போக்குவரத்து வசதிக்காக ஆறுகளை ஒட்டி அமைந்து இருந்தன.
- நகரங்கள் அகழிகளால் சூழப்பட்டு இருந்தன.
- பாதுகாப்பிற்காக கோட்டைச் சுவர்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
- நகரங்களில் அரசுப் பணத்தினை வைத்திருக்கும் கருவூலங்கள் மற்றும் மக்களும் வணிகர்களும் செல்வந்தர்களாக வாழ்ந்த வணிக மையங்கள் இருந்ததால் தாக்குதல் அபாயமும் காணப்பட்டது.
- நகரத்தில் செல்வங்கள் அதிகரித்த போது களிமண் செங்கல்கள் அல்லது சுட்ட செங்கல்களால் வீடுகள் கட்டப்பட்டன.
- மேலும் நகரங்களில் சாக்கடைகள், உறை கிணறுகள், களிமண் குழிகள், சுகாதாரம், குடிமை வசதிகள் முதலிய வசதிகளும் இருந்தன.
- இரும்பினால் செய்யப்பட்ட பல வகையான பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து காணப்பட்டது.
Similar questions