மெளரிய ஆட்சியமைப்பின் முக்கியக் கூறுகளை விவரிக்கவும்.
Answers
Answered by
0
Answer:
I am sorry I can't understand your language
Answered by
0
மெளரிய ஆட்சியமைப்பின் முக்கியக் கூறுகள்
- மெளரிய ஆட்சியில் நாட்டின் நிர்வாகத் தலைவராக அரசர் விளங்கினார்.
- மெளரியர்களின் தலைநகரான பாடலிபுத்திரம் அரசனால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது.
- அரசருக்கு உதவியாக ஒரு மதகுரு, அமைச்சரவை, மகா மாத்திரியர்கள் என்ற செயலாளர்கள் முதலியோர் இருந்தனர்.
- மெளரிய பேரரசின் பகுதிகள் நான்கு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, அரசரின் வாரிசுகளான இளவரசர்களால் ஆட்சி செய்யப்பட்டன.
- அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான வருவாய் மற்றும் நீதி நிர்வாகம் நடைபெற்றது.
- சமஹர்த்தா என்பவர் வரி வசூலிப்பதில் ஈடுபட்டார்.
- தர்மஸ்தியா, கந்தகோ சந்தனா என்ற இரு வகை நீதி மன்றங்கள் அனைத்து முக்கிய நகரங்களிலும் காணப்பட்டன.
- மாகாணங்கள், மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் என நிர்வாக வசதிக்காக மெளரியப் பேரரசு பிரிக்கப்பட்டன.
Attachments:
Similar questions