ஹுணர் குறித்து என்ன அறிவீர்?
Answers
Answered by
0
Answer:
hi mate......
Explanation:
ஹூணர்கள் (Hunas) (கி பி 475–576) நடு ஆசியாவைச் சேர்ந்த ஹெப்தலைட்டுகள் எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நாடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு நுழைந்து, குப்தப் பேரரசையும், மத்திய இந்தியாவின் சந்தேல குல மன்னர் யசோதர்மன் மீது அடிக்கடி தாக்குதல்கள் தொடுத்து காஷ்மீர் முதல் மாளவம் வரையிலான பகுதிகளை கி பி 475 முதல் 576 முடிய ஆண்டனர்.
வெள்ளை ஹூண மன்னர்களில் புகழ் பெற்றவர்கள் தோரமணன் மற்றும் மிகிரகுலனும் ஆவர்.
Answered by
0
ஹுணர்
- ஹுணர்களின் தோற்றம் குறித்த உறுதியான சான்றுகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.
- ரோமானிய வரலாற்று அறிஞரான டாசிடஸின் கூற்றின்படி ஹுணர்கள் என்பவர்கள் காஸ்பியன் கடல் அருகே வாழ்ந்த பழங்குடி இனக் குழுக்கள் ஆகும்.
- ஹுணர்கள் ரோமாபுரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தனர்.
- ஐரோப்பாவில் கொடுங்கோண்மைக்கு பெயர் பெற்ற இவர்களின் தலைவராக அட்டில்லா இருந்தார்.
- வெள்ளை ஹுணர்கள் என்ற ஹுணர் இனக் குழுவினை சார்ந்த ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா நோக்கி படையெடுத்து வந்தனர்.
- குஷாணர்களின் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இந்தியாவில் படையெடுத்து வந்தனர்.
- ஆறாம் நூற்றாண்டில் ஹுணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.
- ஹுணர் படைப்பினால் நாட்டின் மீதான குப்தர்களின் பிடி தளர்ந்தது.
Attachments:
Similar questions