அலகாபாத் தூண் கல்வெட்டுக் குறித்து கூறுக.
Answers
Answered by
1
Answer:
அலகாபாத் தூண் (Allahabad Pillar) கி மு மூன்றாம் நூற்றாண்டின் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவியதாகும். அவர் நிறுவிய பல தூண்களில் அலகாபாத் துண் மணற்கல்லால் ஆனது. இத்தூண் உயரம் 35 அடி உயரமும் 35 அங்குலம் சுற்றளவும் கொண்டது. தூணின் உச்சியில் அமர்ந்த நிலையில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது.
இத்தூண் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்த ஸ்தூபி ஆகும். இத்தூணில் அசோகரின் குறிப்புகள்[1]:3 மற்றும் சமுத்திரகுப்தரின் குறிப்புகள் காணப்படுகிறது. [2]
Explanation:
Answered by
2
அலகாபாத் தூண் கல்வெட்டு
- அலகாபாத் தூண் கல்வெட்டுகள் சமுத்திர குப்தரின் ஆட்சி, ஆளுமை மற்றும் சாதனைகளை குறிக்கின்றன.
- இந்த கல்வெட்டினை பொறித்தவர் ஹரிசேனர் ஆவார்.
- இந்த கல்வெட்டு ஆனது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ளது.
- இந்த கல்வெட்டு அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டு உள்ளது.
- இதில் சமுத்திர குப்தர் மெளரிய பரம்பரையில் இருந்து வந்ததாக கூறப்பட்டு உள்ளது.
- இது சமுத்திர குப்தர் நாடு முழுவதும் படையெடுத்து சென்ற போது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், அவர்களின் ஆட்சிப் பகுதிகள் முதலியன குறித்த மிகப் பெரிய பட்டியலை அளிக்கின்றன.
- தெய்வபுத்திர சகானுசாகி, சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு மன்னர்களும் இவருக்கு கப்பம் கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது.
Attachments:
Similar questions