India Languages, asked by gthamaraiselvan6580, 7 months ago

மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு என்ன பெயர்​

Answers

Answered by csarivarasi
0

Explanation:

மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு ஊருணி என்று பெயர் உள்ளது.

Answered by ravilaccs
0

Answer:

ஊருணி - மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை

Explanation:

தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்:

அகழி - கோட்டையின் புறத்தே  அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

அருவி - மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது.

ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு

ஆறு - இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு

இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்

உறைக்கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு

ஊருணி - மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை

ஊற்று - அடியிலிருந்து நீர் ஊறுவது

ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம் .

கட்டுக்கிணறு -சரளை நிலத்தில் தோண்டி கல் , செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு.

கடல் - அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும்பரப்பு

கண்மாய் - பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்

குண்டம் - சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை

குண்டு - குளிப்பதற்கேற்ற சிறுகுளம்

குமிழி - ஊற்று அடிநிலத்து நீர் , நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று

கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

கேணி - அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு

புனற்குளம் - நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை

பூட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு.

கிடைத்த நீரை எப்படி எல்லாம் சேமித்து நம் முன்னோர் வாழ்ந்துள்ளார்கள்!!

Reference link

  • https://brainly.in/question/16080058
  • https://brainly.in/question/15662717
Similar questions